பசிக்குதும்மா.. அரற்றிய குழந்தை.. டக்கென எழுந்து பாலூட்டி விட்டு கோமாவில் விழுந்த தாய்!
கோமாவில் வீழ்ந்த பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி உள்ளார்
Recommended Video
சான்பிரான்சிஸ்கோ: ஈடு இணையில்லா தாய்மையின் உன்னதத்தை உலகுக்கு உரத்த சொல்லும் செயல் ஒன்று தற்போது நடந்து மக்களை புல்லரிக்க வைத்துள்ளது.
வடக்கு அர்ஜென்டீனா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் பெண் மரியா லாரா பெர்ராரோ. இவருக்கு வயது 42ஆகிறது.. 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், போன மாசம் மரியா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம மனிதனால் திடீரென தாக்கப்பட்டார். அந்த நபர் யார் என்றே தெரியவில்லை.. எதற்காக அடித்தார் என்றும் தெரியவில்லை. ஆனால் மரியாவுக்கு தலையில் பலமாக அடி பட்டுவிட்டது. அதனால் சுயநினைவு இழந்தார்.

தீவிர சிகிச்சை
உடனடியாக அவரை ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இப்போதும் அவருக்கு தீவிர சிகிச்சைதான் நடந்து வருகிறது. ஆனால், இவ்வளவு நாள் தந்த சிகிச்சை கொஞ்சம்கூட மரியாவுக்கு பலனளிக்கவில்லை என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

டாக்டர்கள்
அது மட்டுமில்லை.. மரியா மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும், அதனால் அவரது உறுப்புகளை தானம் செய்யும்படியும் டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். மரியா பூரண குணமடைந்து வந்துவிடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு டாக்டர்களின் இந்த தகவல், தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது.. குடும்பத்தினர் கவலையும், சோகமும் அடைந்தனர்.

2 வயது குழந்தை
இருந்தாலும் மரியாவை அப்படியே விட்டுவிட அவர்களுக்கு மனசு இல்லை. அதனால் என்ன நடக்குமோ நடக்கட்டும், அதுவரை சிகிச்சையை மட்டும் கைவிட வேண்டாம் என்று அவரது கணவர் மார்ட்டின் கேட்டுக் கொண்டார். அதன்படியே சிகிச்சையும் நடந்து வந்தது. போனவாரம், மரியாவின் இளைய மகள் அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தாள்.. அவளுக்கு வயசு வெறும் 2தான்.. படுத்து கிடந்த அம்மா அருகே பாசமாக நெருங்கி சென்றாள்.

பசிக்குதும்மா
இவளுக்கு எப்போது பசித்தாலும் மரியாவை கட்டிப்பிடித்துக் கொண்டு, பசிக்கிறது என்று தாய்ப்பால் கேட்பாளாம். இதுதான் அவள் பழக்கம்.. மரியாவும் குழந்தை பசிக்கிறது என்று சொன்னதும் தாய்ப்பால் புகட்டி பசியாற்றி விடுவாராம். இப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அம்மாவிடம், வழக்கமாக கேட்பது போலவே கட்டிப்பிடித்து கொண்டு "ம்மா.. பசிக்குது" என்று கேட்டாள்.

கோமா
அந்த குரலை கேட்டதுமே, 30 நாள் சுயநினைவு இழந்து கோமாவில் இருந்த மரியா, டக்கென கண் விழித்து குழந்தையை வாரியணைத்து தாய்ப்பால் கொடுத்தார். இதை ஒரு சகஜ நிகழ்வாகவே மரியா வெளிப்படுத்தினார்.. இதை பார்த்ததுமே அங்கிருந்த டாக்டர்கள், குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டனர். தாரை தாரையாக கண்ணீர் அவர்களுக்கு கொட்டியது.. ஆனால் மரியா முழுசுமாக குணமாகவில்லை என்பதுதான் சோகம்.

தாய்ப்பால்
எப்போது குழந்தையின் குரலை கேட்டதும், இயல்பாக எழுந்து தாய்ப்பால் தந்தாரோ, இது ஒரு நல்ல அறிகுறி என்றும், சீக்கிரமாகவே மரியா குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் குடும்பத்தினருக்கு பிறந்துள்ளது. 30 நாள் கோமாவில் கிடந்தவர், இப்படி மகளின் குரலை கேட்டதும் கண்விழித்து, தாய்ப்பால் கொடுத்த சம்பவம் உலக மக்களை புல்லரிக்க வைத்துள்ளது.

மரியா
தாய்ப்பாலை போல கலப்படமற்ற பொருள் இந்த மண்ணில் ஏது? எத்தனை தடைகள், இடையூறுகள் வந்தாலும்சரி, உலக உருண்டையில் கலந்துவிட்ட தாய்மையானது, அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டு.. வீறுகொண்டு நடைபோட்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் உலகிற்கு பறைசாற்றி உள்ளது... மரியா விரைவில் வீடு திரும்ப வாழ்த்துவோம்!












Click it and Unblock the Notifications