நான்கரை வயது மகனை பட்டினி போட்டு கொன்று விட்டு ‘பீட்சா’ சாப்பிட்ட பிரிட்டன் தாய்
பிராட்போர்டு: பிரிட்டனில் 4 வயது மகனைக் கொன்று, இறந்த மகனின் சடலத்தோடு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வாழ்ந்ததாக கைது செய்யப்பட்ட பெண் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது பெண்மணி அமந்த குட்டன். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குட்டன் வீட்டைச் சோதனையிட்டனர்.
அப்போது அவரது படுக்கை அறையிலிருந்து சுமார் நான்கரை வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுவனின் சடலம் குட்டனின் மகன் என்பதும், அவனது பெயர் ஹம்சா கான் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

எடை குறைபாடு....
போலீஸ் கைப்பற்றிய குழந்தையின் சடலத்தில் 6 மாதம் முதல் 1 வயது வரை எடை கொண்ட குழந்தைகள் அணியும் ஆடை உடுத்தப் பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடு....
விசாரணையில், குழந்தை உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடால் இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குழந்தைக்குரிய மருத்துவ வசதிகளையும் குட்டன் ச்ய்து கொடுக்கவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது.

துர்நாற்ற அறை....
இறந்த ஹம்சாவின் உடலை அந்த அறையின் கட்டிலிலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வைத்து குட்டன் பாதுகாத்து வந்துள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான குட்டனின் அறையானது மிகவும் துர்நாற்றத்துடன் இருப்பதையும் விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது.

தொடரும் விசாரணை....
பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் அமந்தா குட்டன் மீது விசாரணை நடந்து வருகிறது. ஆனால், தான் கொலை செய்யவில்லை என்று அமந்தா தரப்பில் மறுக்கப்படுகிறது.

பீட்சா ஆர்டர்...
ஆனால், குழந்தை இறந்த சிறிது நேரத்திலேயே குட்டன் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டதும், தொடர்ந்து குழந்தைகளுக்கான நல உதவிகளை பெற்று வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பிரிந்து சென்ற கண்வர்....
அமந்தா குட்டனின் கணவர் அப்டாப் கான் அவரை விட்டு முன்னரே பிரிந்து சென்று வேறு எங்கோ வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications