“ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இல்லாவிட்டால்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய எச்சரிக்கை!
வாஷிங்டன்: ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும், மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடக்கிறது. கடந்த 2023, அக்டோபர் 7 ஆம் தேதி துவங்கிய இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஆனால், ஹமாஸ் தரப்பில் யோசிக்க நேரம் கேட்கப்பட்டது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட அமைதித் திட்டம் இறுதியாக நடைமுறைக்கு வர உள்ள நிலையில், காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சை இஸ்ரேல் நிறுத்தியது. ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.
மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும். இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்." என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பானது தன் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக இஸ்ரேல் குண்டுவெடிப்பை தற்காலிகமாக நிறுத்தியதற்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பலர் நினைக்கும் தாமதத்தையோ அல்லது காசா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையோ நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதை விரைவாகச் செய்வோம். அனைவரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
இனி ஒருபோதும் பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது! சர்வதேச விதியை மீறி இஸ்ரேல் எடுத்த நடவடிக்கை! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications