மொசாம்பிக் விமான விபத்து: 33 பேர் உயிரிழப்புக்கு காரணம் விமானிதானாம்!
மபுடோ: மொசாம்பிக் விமான விபத்தில் 33 பேர் பலியான சம்பவத்திற்கு காரணம் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிதான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி மொசாம்பிக் நாட்டின் தலைநகர் மபுடோவில் இருந்து அங்கோலாயில் உள்ள லுயாண்டாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 27 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர்.
அங்கோலா நாட்டு எல்லையில் வந்தபோது நமீபியாவின் தேசிய பூங்காவில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 33 பேரும் பலியாகினர். இச்சம்பவம் குறித்து மொசாம்பிக் விமான போக்குவரத்து நிறுவன தலைவர் ஜோலோ ஆப்ரூ விசாரணை நடத்தினார்.

அதில், இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. விமானத்தை ஓட்டிய விமானி கேப்டன் ஹெர்மினியோதான் வேண்டுமென்றே விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இது விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகும் தகவல் குறித்த எச்சரிக்கையையும் மீறி அவர் சாக்பிட் அறையை பூட்டிக் கொண்டார். அதனால் உடன் இருந்த மற்ற விமானியை அனுமதிக்கவில்லை. விமானத்தை மோத செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்று விசாரணை அதிகாரி ஆப்ரூ தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications