For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஹ்ரைனில் இலவச யோகா பயிற்சி.. மன அழுத்தைத்தை குறைக்க இசையுடன் யோகா!!

சஹாஜா யோகா பஹ்ரைன் சார்பில் மே 1-ந் தேதி மாலை இசையுடன் கூடிய யோக பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பஹ்ரைன்: சஹாஜா யோகா பஹ்ரைன் சார்பில் மே 1-ந் தேதி மாலை இசையுடன் கூடிய யோக பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருக்கும் சக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சியை ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி 1970ஆம் ஆண்டு தொடங்கினார். ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர் ஆவார்.

Music & Meditation program on Monday, the 1st May Bahrain

அவரது கணவர் சிபி ஸ்ரீவஸ்தவ்வும் பொதுமக்கள் சேவைக்காக அரும்பாடுபட்டுள்ளார். நிர்மலா தேவியால் தொடங்கப்பட்ட இந்த யோகா பயிற்சி பஹ்ரைனில் 1996ஆம் ஆண்டு முதல் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி 140 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. பஹ்ரைனில் வாராந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக யோகா பயிற்சி அளிக்ககப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி ஜுஃபையரில் பஹ்ரைன் பொறியாளர்கள் சங்கத்தில் மாலை 5 மணிக்கு இசையுடன் கூடிய யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஹிந்துஸ்தானி, தும்ரி மற்றும் சூஃபி இசையில் தேர்ந்தவரான மஹுயா முகர்ஜி, கர்நாடக இசைக் கலைஞர் சங்கீதா ராம்பிரசாத், மிருதங்க கலைஞர் சஜித் சங்கரன், தபேலா கலைஞர் சஜி தாரகம் மற்றும் கீபோர்டு கலைஞர் விக்னேஷ்வர் ஆகியோர் இந்த இசை யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.

இதற்கு நுழைவு கட்டணம் இலவசம்.

பங்கேற்பவர்கள்

39293955,

36685411

39575301

என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sahaja Yoga Bahrain in association with Opel consultants proudly presents Music and Meditation, a vibrant evening filled with enlightening music that will soothe and nourish the soul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X