பாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்
பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் "முடிவு செல்லாது" என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில் இருந்து வாஷிங்டன் விலக வேண்டும் என்பதை இது குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பாலத்தீன அதிபர் அப்பாஸ், "இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதால்" மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை "ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறினார்.
டிரம்ப் நிர்வாகத்துடன் ஈடுபட்டிருந்த பாலத்தீனியர்கள் "இந்த நூற்றாண்டுக்கான உடன்படிக்கையை" ஏற்றுக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது "மிக மோசமான அடி" என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் தனிப்பட்ட முடிவை நிராகரித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள், இது பாலத்தீன மக்களின் உரிமைக்கு எதிரான "தாக்குதலாக" கருதுவதாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கான முயற்சிகளை அமெரிக்கா "குறைந்து மதிப்பிடுவதாக" குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், இந்த முடிவு "தீவிரவாதம் மற்றும் பயங்கரவைதத்தை தூண்டும் வகையில் உள்ளதாக" தெரிவித்துள்ளனர்.
"சட்டத்துக்கு புறம்பான இந்த முடிவை திரும்பப் பெறாமல் இருப்பதற்கான விளைவுகளுக்கு அமெரிக்கா தான் பொறுப்பு" என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது.
"பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும்" என அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலத்தீன நகரத்தின் சட்ட நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா வை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்
- ராஜஸ்தான் முஸ்லிம் கொலை: பொய்ச் செய்திகளால் பரவிய வெறுப்பு காரணமா?
- நாடாளுமன்றத் தாக்குதல்: 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
- வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா?
- மிரள வைத்த ஐந்து மீட்டர் மலைப் பாம்பு
- இலங்கையில் 'விண்கல் மழை' - வெறும் கண்களால் பார்க்க முடியுமென அறிவிப்பு
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!















Click it and Unblock the Notifications