நடுக் கடலில் பயங்கரம்.. இஸ்லாமிய, கிறிஸ்தவ அகதிகள் மோதல்... 12 பேர் கடலில் வீசி கொலை!
ரோம்: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு சென்று கொண்டிருந்த படகில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அகதிகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், படகிலிருந்து 12 கிறிஸ்தவர்களைக் கடலில் தள்ளிக் கொலை செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் கையில் சிக்கி தவிக்கும் லிபியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த செவ்வாய் அன்று இத்தாலி நோக்கி 100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

மத்திய தரைக்கடலின் வட பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, அந்த படகில் இருந்த ஐவரிகோஸ்ட்,மாலி மற்றும் செனேகல் நாட்டை 15 பேர், 12 கிறிஸ்தவர்களை வலுக்கட்டாயமாக கடலில் பிடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த இத்தாலிய கப்பற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படகை நடுக்கடலில் மடக்கி நிறுத்திய கப்பற்படையினர், கிறிஸ்தவர்களை கடலில் தள்ளிய 15 பேரைக் கைது செய்தனர். பின்னர் மற்ற அகதிகள் மற்றொரு கப்பல் மூலமாக பத்திரமாக அருகில் இருந்த சிசிலி தீவின் பலர்மோ நகருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
கைது செய்யப்பட்ட 15 பேரும் இஸ்லாமியர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications