‛மெட்ராஸ்’ தாத்தா.. சிறுவயது சென்னை கடற்கரை நினைவை மோடியிடம் பகிர்ந்த கமலா ஹாரிஸ்! சுவாரசியம்
வாஷிங்டன்: அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் மதிய விருந்து வழங்கினார். இந்த வேளையில் த னக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக மெட்ராஸ் தாத்தா தான் இருந்தார் எனவும், சென்னை கடற்கரையின் நடைப்பயிற்சியின்போது அவர் செய்த செயல்களையும் பிரதமர் மோடியிடம் பகிர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோபைடன் இரவு விருந்து அளித்தார். இதில் இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
மேலும் அதிபர் ஜேபைடனுக்கு பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்பிறகு நேற்று பிரதமர் மோடிக்கு துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஷ் லஞ்ச் (மதிய விருந்து) வழங்கினார்.
இந்த விருந்தில் பிரதமர் மோடிக்கு வெவ்வேறு வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த வேளையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு, இந்தியாவுக்கும் இடையேயான உறவை பற்றி மனம் திறந்து பேசினார். குறிப்பாக சென்னையை அவர் நினைவுக்கூர்ந்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தான் தாய் ஷியாமளா பிறந்தார். மெட்ராஸில் எனது தாயின் தந்தையான கோபாலன் உள்ளார். நானும் என் சகோதரி மாயாவும் அடிக்கடி இந்தியா வந்துள்ளோம். இதற்கு காரணம் எங்கள் அம்மா தான். ஏனென்றால் என் அம்மா இந்தியாவை சேர்ந்தவர். சிறுவயதில் ஒவ்வொரு ஆண்டும் என்னையும், என் சகோதரியையும் அம்மா இந்தியா அழைத்து செல்வார். இதன் பின்னணியில் சுவாரசிய காரணம் உள்ளது. என் அம்மா தான் பிறந்த நாட்டை எங்களுக்கு காட்ட வேண்டும். அவளது உறவுகளை நாங்கள் மறந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
எனது தாத்தாவுக்கு அனைத்து பேரக்குழுந்தைகள் மீது பாசம் இருந்தாலும் என் மீது அவருக்கு தனிப்பிரியம் உண்டு. அவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். அவர் தினமும் காலையில் நண்பர்களுடன் கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு செல்வார். அப்போது என்னை தான் அழைத்து செல்வார். இந்த நடைப்பயிற்சியின்போது அன்றைய பிரச்சனைகள் பற்றி நண்பர்களுடன் விவாதிப்பார். இந்த நடைப்பயிற்சியின்போது என் தாத்தா என் கையை பிடித்து கொண்டே செல்வார். உண்மையிலேயே அப்போது அவர்கள் செய்த விவாதங்களை நான் மனம் திறந்து பாராட்டவில்லை என நினைக்கிறேன்.
ஏனென்றால் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும், ஊழல் எதிர்ப்பு பற்றியும் விவாதித்தனர். இந்தியாவின் சுதந்திர போராட்டம் குறித்த கதைகளை நான் தெளிவாக புரிந்து கொண்டது அங்கு தான். அதோடு ஊழலை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். பாகுபாடு இன்றி சமத்துவம் பேண வேண்டும் என்று அவர்கள் பேசியது இன்னும் கூட எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இந்த உரையாடல்கள், விவாதங்கள் எனக்கு பெரியஅளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உண்மையில் நான் இந்த நிலைமையில் இன்று இருக்க என் தாத்தா பிவி கோபாலன் மற்றும் தாய் ஷியாமளா ஆகியோரின் பங்கு தான் காரணம். அவர்களின் மனஉறுதி, தைரியம் கொடுத்தது உள்ளிட்டவற்றால் நான் இன்று அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருக்கிறேன். மேலும் இந்த வேளையில் இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி வரும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
குவாட் அமைப்புக்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள். ஜி20 மாநாட்டில் உங்களின் தலைமையை நாங்கள் அதிகம் எதிர்பார்த்து உள்ளோம். காலநிலை மாற்றத்தில் உள்ள பிரச்சனைகை தீர்க்க அந்த மாநாடு நிச்சயம் கைக்கொடுக்கும் என நம்புகிறேன். 21 ஆம் நூற்றாண்டில் இந்திய பிரதமாக உலகளாவிய தலைவராக உருவெடுப்பதில் உங்களின் தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நீங்களும் நானும் வெள்ளை மாளிகையில் முதன்முதலில் சந்தித்தபோது, ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் சேருமாறு கேட்டுக் கொண்டேன். விண்வெளி துறையில் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துக்கு தேவையான நடவடிக்கை அதுவாகும். நீங்கள் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் தற்போது சேர்ந்துள்ளீர்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என கூறினார். முன்னதாக கமலா ஹாரிஸ் சென்னையில் உள்ள தனது தாத்தா, பாட்டி, மாமா, சித்தி பற்றியும், இட்லி மீதான தனது காதல் குறித்தும் பேசி கவனத்தை ஈர்த்து இருந்தார்.
அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா தமிழகத்தை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிசின் தாய் ஷியாமளாவின் குடும்பத்தினர் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிசின் தாத்தா பெயர் கோபாலன். இவர் தான் கமலா ஹாரிசின் தந்தை ஆவார். இவர் தான் கமலா ஹாரிசின் பேவரைட் நபர் ஆவார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications