Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரணஓலம்.. மியான்மர் நிலநடுக்கத்தில் 1000யை கடந்த பலி.. இறப்பு10,000யை தொடும் என அமெரிக்கா வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மியான்மர்: மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை தொடலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டின் அண்டை நாடாக மியான்மர் உள்ளது. மியான்மர் என்பது வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இங்கு மக்களாட்சி நடைபெறவில்லை. ராணுவ ஆட்சி தான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் கிளர்ச்சி படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

myanmar-earthquake-toll-hits-694-amid-of-us-agency-warning-that-the-toll-could-exceed-10-000

இதனால் மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பமான அரசியல் சூழல் தான் நிலவி வருகிறது. உள்நாட்டில் ராணுவத்துக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் என்பது ஏற்பட்டு வருகிறது. இதனால் அமைதியான சூழல் என்பது மியான்மரில் இல்லை.

இப்படியான நிலையில் தான் நேற்று மியான்மரில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நம் நாட்டின் நேரப்படி நேற்று காலை 11.30 மணியளவில் மியான்மரில் 7.7 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்த நிலையில் அடுத்து சில நிமிடங்களில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது.

இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் பல பகுதிகள் குலுங்கின. கட்டடங்கள் அதிர்ந்தன. சில அடுக்குமாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தன. சாலைகளில் விரிசல் விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் 2வது பெரிய நகராக அறியப்படும் மண்டாலே மற்றும் சகாய்க் நகரின் 16 கிமீ வடமேற்கு பகுதி மற்றும் அதனை சுற்றிய இடங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் நாட்டின் ஏராளமானவர்கள் பூமிக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி என்பது தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 694 ஆக அதிகரித்துள்ளது. 1,670 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர்.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை என்பது 1000யை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மீட்பு பணி தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் புவியில் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், ‛‛மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்'' என்று அச்சம் தெரிவித்துள்ளது.

மியான்மரை பொறுத்தவரை அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் ராணுவத்தினர் மற்றும் நாட்டில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் என்பது உள்ளது. இதனால் மீட்பு பணியை திறமையாக முன்னெடுப்பதில் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் மியான்மர் ராணுவம் உலக நாடுகளின் உதவியை கோரியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+