சீட்டுக் கட்டு போல சரிந்த கட்டிடங்கள்.. ஒரே நொடியில் மிரண்டு போன மியான்மர்! 100 பேர் பலியா? சோகம்..!
நைபியிடவ்: இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தால் வானுயர கட்டப்பட்டு வந்த கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல ஒரு நொடி பொழுதில் சரிந்து விழுந்தன. இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக ஏறக்குறைய 100 பேர் உயர்ந்திருக்கலாம் எனவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மர் தலைநகர் நைபியிடவ்வை மையமாகக் கொண்டு காலை 11:50 மணி அளவில் முதலிலும் தொடர்ந்து சில நிமிட இடைவேளையில் இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நில நடுக்கம் 7.7 என்ற ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் 6.4 என்று அளவிலும், 3வது நில நடுக்கம் 4 என்ற அளவிலும் பதிவாகி இருந்தது. மத்திய மியான்மரின் மான்வாவில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக வானுயர கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நொடிப் பொழுதில் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தன.
மேலும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் இருந்து மிகப்பெரிய கிரேம்னும், கட்டிடத்தின் உச்சியில் இருந்து அருவி போல நீச்சல் குளத்தின் தண்ணீரும் வெளியானது, சில பகுதிகளில் சாலையில் இருந்த மின்கம்பங்கள் காற்றில் ஆடும் மரங்கள் போல ஆடியது பார்க்கவே பயத்தை ஏற்படுத்துவது போல் இருந்தது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்திலும் பதிவாகியுள்ளது. அங்கும் ஏராளமான கட்டிடங்கள் சேதமாகி இருக்கிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காங், சட்டுச்சாக் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தில் காரணமாக வெடிப்புகள் சாலைகளில் ஏற்பட்டது. தாய்லாந்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கை அச்சம் தரத்தக்க வகையில் உயர்ந்திருக்கிறது.
மேலும் மியான்மர் நாட்டில் முற்றிலும் இணையதள சேவை முடங்கி இருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து வெளி உலகத்திற்கு தெரியவில்லை. தாய்லாந்திலும் நில நடுக்கும் காரணமாக விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தில் ராணுவ ஆட்சி நடப்பதால் பிற நாடுகளை உதவியை மியான்மர் ராணுவம் நாடி இருக்கிறது. அதே நேரத்தில் தாய்லாந்தில் அவசரமாக அமைச்சரவை கூட்டமும் கூட்டப்பட்டு இருக்கிறது.
தற்போது நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பாங்காங்கில் மட்டும் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட தகவலின் படி தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே மியான்மர் தாய்லாந்து ஆகிய நாடுகளை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து நிவாரண குழுக்கள் அங்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவும் இந்த மீட்பு பணியில் விரைவில் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications