கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில், அது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்தியாவின் விண்வெளி துறைக்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திரயான் 3 அடுத்த சுமார் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவை அடைய உள்ளது. இதன் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டும் வெற்றிகரமாக நடந்தால் நிலவில் இறங்கிய 4ஆவது நாடு என்ற சிறப்பை அது பெறும்
மர்ம பொருள்: இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மமான சாட்டிலைட் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியும் விளக்கமளித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் விரிகுடாவிற்கு அருகில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இது வெளிநாட்டிற்குச் சொந்தமான ராக்கெட்டின் ஒரு பகுதி போல இருக்கிறது. இது தொடர்பான படத்தைப் பகிர்ந்த ஆஸ்திரேலியா விண்வெளி ஏஜென்சி, இது ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதால் கடற்கரைக்குச் செல்வோர் அதிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எங்கே: ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான பெர்த்தில் இருந்து வடக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் தான் அங்குள்ள மக்கள் இந்த அசாதாரண பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். கடற்கரைக்கு வாக்கிங் சென்ற தம்பதி, தண்ணீரில் இந்த மர்மப் பொருள் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். பின்னரை அதை பீச் வாகனத்தின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர்.
இந்த மர்மப் பொருள் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம், "மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் கண்டறியப்பட்டுள்ள மர்மப் பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. வெளிநாட்டு விண்வெளி அமைப்பு அனுப்பிய ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம். இது தொடர்பாகப் பல நாடுகளின் விண்வெளி அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

கடற்கரையில் உள்ள மர்மப் பொருள் ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தாலும் அது என்ன என்பதை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. இதற்கிடையே நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சந்திரயான் 3: ஒரு தரப்பினர் இது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். சந்திரயான் 3 கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்த போது, அதன் லிப்ட்ஆஃப் ஆஸ்திரேலியாவில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனவே, இது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த பொருளில் பாசி உருவாகியுள்ளது. மேலும், அதிகப்படியான சேறும் சகதியும் கூட படிந்துள்ளது. சந்திரயான் செலுத்தப்பட்டு 3 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் இந்த குறுகிய காலத்தில் இந்தளவுக்குச் சேறும் சகதியும் படிந்துவிடாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது சந்திரயான் 3ஆக இல்லை என்றாலும் இது பார்க்க பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூன்றாவது ஸ்டேஜை போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அதன் எரிபொருள் டேங்காகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதை யாரும் உறுதி செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் இது குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் என கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications