கென்யா தாக்குதலின் போது விலையுயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்ற ராணுவவீரர்கள்
நைரோபி: கென்யாவில் வணிக வளாகம் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கிய போது, அங்கிருந்த கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்புக்கு வந்த ராணுவத்தினரே கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
கென்யாவின் தலைநகரான நைரோபியில் இஸ்ரேல் நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகம் உள்ளது. பணக்காரர்கள் அதிகம் வந்துபோகும் இந்த வளாகத்தில் கடந்த வாரத்தில் ஷெபாப் தீவிரவாதிகள் அதிரடியாக உட்புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில், அப்பாவி பொதுமக்கள் 67 பேர் பரிதாபமாக பலியாயினர். அப்போது தீவிரவாதிகளை அழிக்க பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 5 நாட்களுக்குப் பிறகு, ஒருவழியாக தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டு வணிக வளாகம் ராணுவத்தினர கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, தங்களது கடைகளுக்கு வந்த உரிமையாளர்கள் ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டனர்.
தீவிரவாதிகள் சுடத் தொடங்கியதும் உயிருக்கு பயந்த கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை திறந்து போட்டுவிட்டு சென்றதால் அந்த வர்த்தக வளாகத்தில் உள்ள நகை கடைகள், செல்போன் கடைகள், விலை உயர்ந்த 'ரேடோ' வாட்ச் கடைகள், லேப் டாப் கடைகளில் இருந்த ஏராளமான பொருட்கள் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.
அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட ராணுவத்தினர் கல்லாவில் இருந்த பணம் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் பலவற்றை கொள்ளையடித்து இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது.
அதேபோல், தாக்குதலில் பலியானவர்களின் உடலையும் சோதித்து அவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களையும் ராணுவ வீரர்கள் அபகரித்துச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் நைரோபி விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் அங்கிருந்த பொருட்களைத் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications