2015ம் ஆண்டு தான் ரொம்ப ரொம்ப ஹாட்... நாசா + நோவா தகவல்
நியூயார்க்: 2015ம் ஆண்டுதான் பூமியிலேயே இதுவரை பதிவான வெப்ப நிலையிலேயே அதிக வெப்ப நிலை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்த விவரங்களை நாசா மற்றும் "நோவா" எனப்படும் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டலவியல் நிர்வாகக் கழகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA).) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
1880ம் ஆண்டு முதல் பூமியில் வெப்ப நிலையைப் பதிவு செய்யும் முறை தொடங்கியது. அது முதல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலையை ஆய்வு செய்து நாசாவும், நோவாவும் 2015ம் ஆண்டுதான் இதுவரை பூமியிலேயே வெப்ப நிலை அதிகம் பதிவான ஆண்டு என்று கூறியுள்ளது.
இதற்கு முன்பு 2014ம் ஆண்டுதான் வெப்ப நிலை அதிகமான வருடமாக இருந்தது. தற்போது அதை விட 0.13 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை 2015ல் கூடுதலாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1998ம் ஆண்டுதான் அதிக வெப்ப நிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரிய சவால்...
2015ம் ஆண்டில்தான் நீண்ட நாட்களுக்கு அதிக வெப்ப நிலையை பூமி சந்தித்துள்ளது. சூழலியல் மாற்றமே இதற்கு முக்கியக் காரணமாகும். இது நமது சந்ததிகளுக்கு மிகப் பெரிய சவால் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எச்சரிக்கை...
இந்த தகவல் பூமியில் வசிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் எச்சரிக்கையாகும் என்று நாசா நிர்வாகி சாரல்ஸ போல்டன் கூறியுள்ளார்.

வெப்பநிலை அதிகரிப்பு...
19வது நூற்றாண்டுக்குப் பிறகு நமது கிரகத்தின் தரைப்பகுதி வெப்பநிலையானது 1.0 டிகிரி செல்சியல் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய அபாயமாகும். கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற ஆபத்தான வாயுக்களின் அளவு அதிகமாகியுள்ளதாம்.

பெரிய மாற்றம்...
1880 முதலே வெப்ப நிலையில் தொடர்ந்து கணிசமான மாற்றம் ஏற்பட்டு வருகிறதாம். கிட்டத்தட்ட உலகின் பெரும்பாலான பகுதிகளில் 1951 முதல் 80 வரை வெப்ப நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

35 ஆண்டுகளில்...
கடந்த 35 ஆண்டுகளில்தான் அதிக அளவிலான வெப்ப நிலை பூமியில் பதிவாகியுள்ளது. அதிலும் 2001 முதலான ஆண்டுகள்தன் அதிக வெப்பமான ஆண்டுகள்.

அதிக வெப்பம்...
கடந்த ஆண்டுதான் உலகிலேயே மிக அதிக வெப்ப நிலை பதிவான ஆண்டாக அமைந்தது. இது 1880- 1899 ஆண்டுகளுக்கான சராசரியை விட அதிகமாகும்.

எல் நினோ...
எல் நினோ இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம். இந்த தாக்குதல் 2015ம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் உலகைப் பாதித்துள்ளது.

6300 வானிலை மையங்கள்...
உலகம் முழுவதும் உள்ள 6300 வானிலை மையங்கள், கடல் மற்றும் பிற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள வெப்ப நிலை கணக்கீட்டுக் கருவிகளில் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது நாசாவும், நோவாவும்.

செயற்கைக்கோள்கள்...
அதேசமயம், துருவப் பகுதிகளின் வெப்ப நிலையை வேறு அளவீடுகள் மூலம் கணக்கிட்டுள்ளனர். நாசாவும், நோவாவும். பூமியில் ஏற்படும் மாற்றங்களை பல்வேறு செயற்கைக் கோள்களின் உதவியுடன் தொடர்ந்து நாசா கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications