நானோ ஹெலிகாப்டர், ரோபோட் தேனீ.. செவ்வாயை ஆராய்ச்சி செய்ய நாசாவின் அல்டிமேட் ஐடியா!
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது.
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது. 2020ல் இந்த ஹெலிகாப்டர் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.

எப்படி உருவானது
இந்த ஹெலிகாப்டர் நானோ தொழில்நுட்பம் மூலம் உருவானதாகும். இதை உருவாக்க நாசா விஞ்ஞானிகள் கடந்த 4 வருடமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான ஆராய்ச்சிக்கு பின் செவ்வாயின் வானிலையில் பறக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர். இதன் எடை வெறும் 1.8 கிலோதான் இருக்கும். பூமியில் பயன்படுத்தப்படும் டிரோன் வகை விமானங்களை விட சிறிதாக இருக்கும்.

வேகம்
இதன் இறக்கைகள் மொத்தம் ஒரு நிமிடத்திற்கு 3000 முறை சுழலும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பூமியில் உள்ள ஹெலிகாப்டரை விட வேகமாக சுழலும். செவ்வாயில் பறப்பதற்காக இப்படி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இது பூமியில் 40 ஆயிரம் அடி வரை பறக்கும், செவ்வாயில் 1 லட்சம் அடி வரை பறக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆராய்ச்சி
இதில் சிறிய ரக கேமராக்கள் உள்ளது. இது ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பும். இது 2020ல் ஏவப்பட்டு 2021 செவ்வாயை அடையும். இதனுடன் இதை கட்டுப்படுத்துவதற்காக, ரோவர் ஒன்றும் அனுப்பப்பட உள்ளது. இந்த ரோவரில், இந்த ஹெலிகாப்டரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரை செவ்வாய் கிரகத்தில் பறக்கும்.

அடுத்து என்ன திட்டம்
இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications