இந்திய பிரதமராக இருந்தாலும் சரி.. 100% வரிக்கு ரெடியா இருங்க! நேட்டோ கொடுத்த பகிரங்க வார்னிங்
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் பெயரை குறிப்பிட்டு நேட்டோ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட், "ரஷ்யாவுடன் தொடர்ச்சியாக வணிகம் செய்யும் பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க செனட் உறுப்பினர்களை சந்தித்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, உக்ரைன் போர் விஷயத்தில் சமாதானமாக போக வலியுறுத்த வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒருபுறம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவது செய்துக்கொண்டு, அதே நேரம், போர் குறித்து சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால், மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளும் 100 சதவீத இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ரூட் கூறினார். "சீனா, இந்தியா அல்லது பிரேசில் நாட்டின் பிரதமர்கள், அதிபர்களாக இருந்தாலும், இந்த நடவடிக்கைகள் உங்களை கடுமையாக பாதிக்கும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி மிரட்டல்
உக்ரைனுடன் 50 நாட்களுக்குள் சமாதான ஒப்பந்தம் எடுக்கப்படாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதாவது "இது மிகவும் மோசமான முடிவாக இருக்கும்" என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.
செனட் ஒப்புதல் இல்லாமல் கூட இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த முடியும் எனவும், இது ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் நிலைமை
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கி வருகிறது. நாம் மட்டுமல்ல சீனா மற்றும் துருக்கி ஆகியவையும் எண்ணெய்யை வாங்கி வருகிறது. இப்படி இருக்கையில் ரஷ்யாவை மேற்கோள் காட்டி இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது எரிசக்தி விநியோகத்தை பாதித்து, உலகளாவிய விலைகளை மேலும் உயர்த்தும் அபாயத்தை உருவாக்கும்.
வரி விஷயத்தில் மட்டுமல்லாது மற்ற சில விஷயங்களிலும் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. ரஷ்ய விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள மேம்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இது குறித்து கூறுகையில், ""அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார். மேலும் இது எந்த தீர்வையும் வழங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications