ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே.. மோடியின் "ராஜதந்திரம்".. விலைவாசியை கட்டுப்படுத்தியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் காரணமாக உலக நாடுகள் கடும் அழுத்தத்தில் உள்ளன. இந்த போர் காரணமாக ஏற்பட்ட உலக அரசியல் பிரச்சனைகளால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய், யூரியா போன்ற பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல உலக நாடுகள் விலைவாசி உயர்வு காரணமாக அவதிப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் விலைவாசி உயர்வும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு இடையிலும் இந்தியாவில் பொருளாதாரமும், அரசியலும் வலிமையாக காணப்படுகிறது. இந்தியா எப்படி இந்த பிரச்னையை எதிர்கொள்கிறது.. பொருளாதாரத்தை இந்த மோசமான சூழ்நிலையில் எப்படி பாதுகாக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.

russia ukraine

ரஷ்யா உக்ரைன் போரின் தாக்கம்:

கச்சா எண்ணெய் மற்றும் யூரியா இறக்குமதியை இந்தியா அதிக அளவில் சார்ந்து உள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்தியா நேரடியாக பாதிக்கும் அபாயங்கள் உள்ளன. யூரியா, கச்சா எண்ணெயின் முக்கிய சப்ளையர்களான ரஷ்யா மற்றும் உக்ரைன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மோதலில் ஈடுபட்டுள்ளன. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. அதோடு கணிசமான விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாக இருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், எண்ணெய் மற்றும் யூரியா இரண்டின் இறக்குமதி பாதிக்காமல் இந்தியா பார்த்துக்கொண்டது. ராஜதந்திர முயற்சிகள் மூலம் இதன் விலைவாசி இந்தியாவில் உயராமல் இந்தியா பார்த்துக்கொண்டது.

எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு:

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கடந்த சில மாதங்களில் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த போர் சூழலை இந்தியா சிறப்பாக கையாண்டு.. போர் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக ரஷ்யா உருவெடுத்துள்ளது. இப்போது நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 20% க்கும் அதிகமாக ரஷ்யாவில் இருந்தே வாங்கப்படுகிறது. இது ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு முன்பு 2% ஆக இருந்தது. உலகளாவிய மோதல், கொந்தளிப்பு இருந்தபோதிலும் இந்தியா உறுதியாக இந்த நிலைப்பாட்டை எடுத்து.. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை உறுதி செய்தது. இந்தியாவின் ராஜதந்திர வெற்றிகளில் இது ஒன்றாக பார்க்கப்பட்டது. முறையாக திட்டமிட்டு.. எண்ணெய் இறக்குமதியை உறுதி செய்தி இந்தியா விலைவாசியை கட்டுப்படுத்தியது .

உர சப்ளைகளை உறுதி செய்தல்:

இதேபோல், இந்தியாவின் விவசாயத் துறைக்கு அத்தியாவசியமான உர இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இந்த போருக்கு இடையே யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டாலும் கூட.. இந்தியா அதை சிறப்பாக கையாண்டது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்துவதில் மோடி அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதன் மூலம் எண்ணெய் பிரச்சனையும் வரவில்லை.. யூரியா பிரச்சனையும் வரவில்லை. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் ரஷ்யா - உக்ரைன் மோதல் பாதித்த போதிலும் இந்தியாவை இந்த மோதல் பாதிக்கவில்லை.

பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் மானியங்கள்:

உலகளாவிய விலைவாசி உயர்வுக்கு இடையே.. நுகர்வோர் மற்றும் விவசாயிகளை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்க மோடி அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஇதற்காக மோடி கொண்டு வந்த முக்கிய உத்திகளில் ஒன்று மானியத் திட்டங்களின் விரிவாக்கம் ஆகும். எண்ணெய் மானியங்கள் மூலம் எரிபொருள் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதன் மூலம் வாகன போக்குவரத்து விலை கட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுப்படுத்தப்பட்டது.

அதே சமயம் யூரியா மானியங்கள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக மாறி உள்ளது. இந்த மானியம் காரணமாக உர விலை கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் யூரியாவுக்கான மானியம் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த கடினமான காலங்களில் விவசாயத் துறையை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது

சவால்கள்:

இருப்பினும், இந்த மானியங்களை அளிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.. இதற்கு பின் பல சவால்கள் உள்ளன. வேலை உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக நலன் போன்ற முக்கியமான பணிகளுக்கு பயன்படுத்தவேண்டிய நிதியைத்தான் இந்த மானியங்களுக்காக கொடுத்துள்ளனர்.

நீண்ட கால முதலீடுகளை விட குறுகிய கால நிவாரணத்திற்கு முன்னுரிமை அளித்து, அரசாங்கம் எடுக்க வேண்டிய கடினமான முடிவுகளை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி உள்ளது. பொருளாதார ரீதியாக சிரமங்களை ஏற்படுத்தினாலும்.. பிரதமர் மோடி துணிச்சலாக விலைவாசியை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

இனி என்ன நடக்கும்?:

ராஜதந்திர திட்டமிடல் மூலம் எண்ணெய் மற்றும் யூரியாவின் விநியோகம் பாதிக்காமல் இந்தியா பாதுகாத்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் வலுவான உறவுகளைப் பேணுவதன் மூலம், விலைவாசி உயராமல் இந்தியா பார்த்துக்கொண்டது. எண்ணெய் மற்றும் யூரியா இரண்டின் இறக்குமதி பாதிக்காமல் இந்தியா பார்த்துக்கொண்டது.

இந்த குறுகிய கால நடவடிக்கைகள் பலனளிக்கும் அதே வேளையில், நீண்ட கால தீர்வுகள் மீது மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலகளாவிய மோதல்களுக்கு இடையே.. தற்போது விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டாலும்.. இந்தியா எதிர்கால தீர்வுகளை நோக்கியும் காய் நகர்த்தி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற எந்த விதமான உலக போர்கள் மூலமும் பாதிக்காமல் இருக்கும் வகையில் நீண்ட கால தீர்வுகள் மீது மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+