தாலிபன்கள் அரசியலில் குதித்து மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும்: பாக். அதிபர் தூது
இஸ்லாமாபாத்: தாலிபன்கள் அமைதிப் பேச்சுக்கு சம்மதிக்க வேண்டும், மேலும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும் என தாலிபன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்.
அரசு முறை சுற்றுப் பயணமாக லண்டன் சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப். அப்போது அங்குள்ள ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனத்திற்கு நவாஸ் ஷெரிப் பேட்டியளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘எனது தலைமையிலான அரசு பாகிஸ்தான் மற்றும் இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றே நடவடிக்கை எடுத்து வருகிறது. தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடர தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க நான் உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்து அனைத்து கட்சிகளுடனும் உள்துறை அமைச்சர் பேசுவார்.
இதுகுறித்த அனைத்து கட்சி கூட்டத்தில், போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் தலிபான்கள் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் அரசியலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications