இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசலை ஏற்படுத்திவிட்டது பதன்கோட் தாக்குதல்: பிரதமர் நவாஸ் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

லாகூர்: பதன்கோட் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு வந்து சென்ற பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தது.

Nawaz Sharif expressed sadness Pathankot terror attack

ஆனால், பதான்கோட் தாக்குதல் சம்பவம் இந்த பேச்சுவார்த்தையில் இடையூறை ஏற்படுத்தியிருப்பது வருத்தப்படவேண்டிய விஷயம். மேலும் அவர் கூறுகையில், பதன்கோட் தாக்குதலுக்கு நமது மண் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதனை வெளிக்கொண்டு வருவது நமது பொறுப்பு ஆகும். அதனை நாம் செய்வோம். இதுதொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை விரைவில் முடிவடையும். தீவிரவாதிகள் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார்கள். மீதமிருக்கும் தீவிரவாதிகளும் அழிக்கப்படுவார்கள் என்றார்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள், ஏழு பேர் வீர மரணம் அடைந்தனர்; நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.'இந்த தாக்குதலுக்கு காரணமாக, ஜெய்ஸ் - இ - முகமது தலைவன் மசூத் அன்சார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால்தான், இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு தொடரும்' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+