வெள்ளையர் ஆதிக்கத்தையும், கருப்பர் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியவர் மண்டேலா- ஒபாமா
ஜோஹன்னஸ்பர்க்: வெள்ளையர் ஆதிக்கத்தை மட்டுமல்லாமல், கருப்பர் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியவர் நெல்சன் மண்டேலா என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒபாமா கலந்து கொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினார். அவரது உரையிலிருந்து சில பகுதிகள்..

நல்ல மனிதர்
மண்டேலா ஒரு நல்ல மனிதராக, மகனாக, கணவராக, தந்தையாக, நண்பராக விளங்கியவர்.

சாதிக்காதது ஏதுமில்லை
அவர் சாதிக்காதது ஏதுமில்லை. எதையும் சாதிக்க முடியாது என்று கூற முடியாது என்பதற்கு அவர்தான் சரியான உதாரணம். அவரிடமிருந்து கற்க நிறைய உள்ளது.

செயல் வீரர்
மண்டேலா ஒரு நல்ல செயல் வீரர். பேச்சோடு நிற்காமல் செயல்பட்டுக் காட்டியவர்.

கோபத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றியவர்
கோபத்தை கொந்தளித்து வெடிக்க விடாமல் அதை ஒருமுகப்படுத்தி அதை ஆக்கப்பூர்வமான பாதையில் திருப்பியவர் மண்டேலா. கடவுள் நமக்குக் கொடுத்த உரிமைகளை, ஆண்களும், பெண்களும் சமமாக நுகரும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தவர். அதற்காக தீரத்துடன் போராடியவர்.

இருவரையும் எதிர்த்துப் போராடியவர்
வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து அவர் போராடினார். அதேபோல கருப்பர்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்து அவர் போராடினார்.

கொள்கை வீரர்
கொள்கைக்காக வாழ்ந்தவர் மண்டேலா. கொள்கைக்காக உயிர் விடவும் தயாராக இருந்தவர். கொள்கைகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியவர். வாதமாக இருந்தாலும் காரணத்திற்காக வாதாடியவர்.

சிறைக்குள் ஞானோதயம்
சிறைக்குள் நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்தாலும் தனது கொள்கைளை பட்டொளி வீசிப் பறக்க விட்டார். உறுதி குலையாமல் இருந்தார்.

உண்மையான ஹீரோ
உண்மையான ஹீரோவாக வாழ்ந்தவர் மண்டேலா. அவரது வாழ்க்கை ஒரு சரித்திரம். அனைவருக்கும் நல்ல பாடமாக அவர் மாறியிருக்கிறார்.

அவர் காட்டிய வழியில்
மண்டேலா காட்டிய வழியில் அனைவரும் போராடுவோம். நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் என்றார் ஒபாமா.












Click it and Unblock the Notifications