சாதிக்குமா Gen Z இளைஞர் படை? நேபாளத்தில் இன்று நடைபெறும் பொது தேர்தல்.. விறுவிறு ஏற்பாடுகள்
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் இன்றைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு கடந்தாண்டு தான் இளைஞர்கள் போராட்டம் காரணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்ந்தது. இந்தச் சூழலில் தான் புதிய அரசைத் தேர்வு செய்ய நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நமது அண்டை நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வளவு ஒன்றும் அமைதியான சூழல் நிலவவில்லை. இலங்கை, வங்கதேசம், நேபாளம் என பல்வேறு அண்டை நாடுகளிலும் வரிசையாகச் சிக்கல்கள் நடந்தன. குறிப்பாக நேபாளத்தில் கடந்தாண்டு தான் மிக மோசமான ஒரு சூழல் ஏற்பட்டு இருந்தது.

நேபாளம்
அங்குக் கடந்த ஆண்டு Gen Z இளைஞர்கள் தீவிர போராட்டங்களில் இறங்கினர். சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து முதலில் வெடித்த இந்த போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை கையை விட்டுச் செல்லும் சூழல் உருவானதால் சமூக வலைத்தள தடை வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், போராட்டங்கள் தொடர்ந்தது.. இதனால் நேபாள அரசு கவிழ்ந்தது. இருப்பினும், இந்த கொடூர போராட்டத்தில் குறைந்தது 77 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில் தான் நேபாளத்தில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நடந்த மிக மோசமான போராட்டங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தேர்தல் இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்கி தலைமையிலான ஆட்சிக்கு மாற்றாக அமையும்.
அரசியல் தலைவர்கள்
இந்த தேர்தலில் ஷேர் பகதூர் டூபா (நேபாள காங்கிரஸ்), கே.பி. ஷர்மா ஓலி (CPN-UML கம்யூனிஸ்ட் கட்சி), புஷ்ப கமல் தஹால் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்)) ஆகியோர் இந்த தேர்தலில் களமிறங்குகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு நல்லது செய்வதில்லை என்ற எண்ணம் மக்களிடையே இருந்ததே கடந்தாண்டு போராட்டத்திற்குக் காரணமாக இருந்த நிலையில், அதைத் தாண்டி எப்படி மக்களை இந்த அரசியல் கட்சிகள் கவர்கிறது என்பதே சவாலாக மாறியுள்ளது..
சவால்
இந்த பழம்பெரும் கட்சிகளுக்குச் சவால் விடுக்கும் வகையில், இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ராஷ்டிரிய ஸ்வதந்திரா கட்சி உள்ளிட்டவை களமிறங்கியுள்ளது.. கடந்த ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 74 வயதான கே.பி. ஷர்மா ஓலி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு எதிராக இந்த இளைஞர் கட்சியான ஆர்எஸ்பி களமிறங்குகிறது. அக்கட்சித் தலைவர் பாலேந்திர ஷா தன்னை ஒரு மாற்றுச் சக்தியாகக் காட்டிக் கொள்கிறார்.
நாட்டின் பழமையான கட்சியான நேபாள காங்கிரஸின் 49 வயது புதிய தலைவரான ககன் தாப்பாவும் பிரதமர் ரேஸில் இருக்கிறார். இதனிடையே, மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்று இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்கி வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
உலகின் மிக உயரமான 10 சிகரங்களில் எவரெஸ்ட் உட்பட 8 சிகரங்கள் நேபாளத்தில் தான் உள்ளது. இப்படி பெரும்பாலான இடங்கள் பனி மூடிய பகுதிகளாகவே இருக்கும் சூழலில், அங்குத் தேர்தலை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவம் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.
அங்குத் தேர்தல் முடிந்தவுடன் தொலைதூர பகுதிகளில் இருந்து முதலில் வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து வருவார்கள். அதன் பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய சில நாட்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.
இருப்பினும், வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிரெண்ட் எது என்பது தெரிய வந்துவிடும்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications