நேபாளத்தின் புது திட்டம்.. சீன தலைவர்களுடன் சீக்ரெட் மீட்டிங்.. லடாக்கில் பதற்றம்.. என்ன செய்கிறது?
காத்மாண்டு: சீனாவில் இருக்கும் அரசியல் தலைவர்கள் உடன் நேபாளத்தில் இருக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. அவசர அவசரமாக இந்த மீட்டிங் நடந்து வருகிறது.
கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையில் லடாக், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய எல்லைகளில் சண்டை நடந்து வருகிறது. இதில் சிக்கிம், லடாக் பிரச்சனை மோசமாகி உள்ளது.

சீனா என்ன
இந்த நிலையில் லடாக் எல்லையில் தற்போதும் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அதேபோல் சீனா அங்கு புதிய கட்டுமானங்களையும் செய்து வருகிறது. அதேபோல் அங்கு சீனா தொடர்ந்து ஆயுதங்களையும் குவித்து வருகிறது. இதனால் நிமிடத்திற்கு நிமிடம் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

நேபாளம் எப்படி
இன்னொரு பக்கம் நேபாளம் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகிறது. முன்னதாக இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து இதனால் சண்டை நடந்து வருகிறது. இந்தியாவை எதிர்க்க முடிவு செய்த நேபாளம் இதற்காக மேப் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

என்ன வரைபடம்
இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. அதற்கு அனுமதியும் பெற்றது. நேபாளத்தின் இந்த செயலுக்கு பின் சீனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. நேபாளத்தின் பின் சீனா இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக நேபாளம் எப்படி இயக்குகிறதோ அதேபோல் நேபாளத்தையும் தற்போது சீனா இயக்குகிறது என்கிறார்கள்.

படைகள் குவிப்பு
இந்த நிலையில்தான் நேபாளத்தின் எல்லையில் அந்த நாடு படைகளை குவித்து உள்ளது. ஆம் முதல் முறையாக நேபாளத்தின் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் நேபாளம் நம்மை இப்படி சீண்டியதே இல்லை. கல்பாணி பகுதிக்கு அருகே நேபாளம் படைகளை குவித்து வருகிறது. இதனால் அங்கு நேபாளம் என்ன மாதிரியான திட்டங்களை தீட்டுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

இன்று மீட்டிங்
இன்னொரு பக்கம் சீனாவில் இருக்கும் அரசியல் தலைவர்கள் உடன் நேபாளத்தில் இருக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. அவசர அவசரமாக இந்த மீட்டிங் நடந்து வருகிறது. இந்தியா எல்லை பிரச்சனை குறித்து அந்த நாட்டு ஆளும் கட்சி தலைவர்கள் மீட்டிங் நடத்தி வருகிறார்கள். இதில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக இதில் திட்டங்கள் தீட்டப்படலாம் என்று கூறுகிறார்கள்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications