மேப்பா விடுறீங்க? இந்தியாவை சீண்டிய நேபாள பிரதமருக்கு பெரும் அடி.. நாட்டுக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு
காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் பகுதிகளை தங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளாக காட்டி நேபாள அரசு வெளியிட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எந்த அளவிற்கு பிரச்சனை இருக்கிறதோ அதே அளவிற்கு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா நேபாளம் அருகே போட்ட சாலை காரணமாக தற்போது இந்தியாவுடன் நேபாளம் மோத தொடங்கி உள்ளது.
இந்தியா - சீனா- நேபாள் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைதான் லிபு லேக் பகுதி. இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.

ஏன் இந்த சாலை
உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. நேபாளம் எல்லையில் இருந்து 5 கிமீ தூரம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார்.

வரைபடம் வெளியிட்டது
இதற்காக நேபாளம் முறையின்றி வரைபடம் ஒன்றையும் வெளியிட்டது. அதாவது பு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இந்த பகுதிகள் இந்தியாவிற்குள் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவை சீண்டும் வகையில் இந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. ஆனால் இது தற்போது அந்நாட்டு பிரதமர் சர்மாவிற்கே எதிராக திரும்பி உள்ளது.

சிக்கல்
இந்தியாவில் இருக்கும் பகுதிகளை தங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளாக காட்டி நேபாள அரசு வெளியிட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வரைபடத்திற்கான அனுமதி மற்றும் அதற்கான சட்ட திருத்தம் இரண்டின் மீதான விவாதம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வந்தது. ஆனால் அதன் மீதான வாக்கெடுப்பு நடக்கும் முன்பே அங்கிருந்து உறுப்பினர்கள் பலர் வெளியேறினார்கள்.

அவைக்கு வரவில்லை
அவையில் இருக்கும் எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் வரவில்லை. இதனால் இன்று இதன் மீதான விவாதம் நடத்தப்படவில்லை. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அவைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவிற்கு அந்நாட்டு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் மற்ற கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் அவைக்கு வரவில்லை. அப்படியே எல்லோரும் அவைக்கு வந்தாலும் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்கிறார்கள்.
Recommended Video

பெரும் அடி
இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் அதற்கு எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என்று சர்மா நினைத்தார். ஆனால் இதுவே அவருக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. முக்கியமாக இந்தியாவின் அழுத்தத்தை பயன்படுத்தி சர்மாவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகிறது. இந்தியாவில் கலகத்தை ஏற்படுத்த முயன்று பிரதமர் சர்மாவிற்கு தற்போது அவர்கள் நாட்டுக்கு உள்ளேயே இதனால் கலகம் ஏற்பட்டுள்ளது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications