நேபாளம்: மலையென இடிபாடுகள்,... விடாத மழை... அதிர வைக்கும் நிலநடுக்க வீடியோ காட்சி!!
காத்மண்டு: நேபாளத்தில் மலையென குவிந்து கிடக்கும் இடிபாடுகளாலும் விடாது பெய்து வரும் மழையாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே நிலநடுக்கத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிற அதிர வைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.9 அலகுகளாக பதிவாகி இருந்த இந்நிலநடுக்கத்தால் ஏராளமான கோவில்கள், கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

உயிருடன் 4 மாத குழந்தை மீட்பு
இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருடன் இருந்த 4 மாத குழந்தை ஒன்று நேற்று முன் தினம் மீட்கப்பட்டிருந்தது. இதேபோல் இன்னமும் ஏராளமானோர் இடிபாடுகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மீட்புப் பணிகளில் முட்டுக்கட்டை
மலைபோல குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே மோப்பநாய்கள் உள்ளிட்டவை உதவியுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது.
15 உடல்கள் மீட்பு
இதனிடையே இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காத்மண்டு நகரில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 15 உடல்களை மீட்டுள்ளனர். காத்மண்டு நகரில் மழையும் பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் அவ்வப்போது பெரும் இடையூறு ஏற்படுகிறது. ஆப்பரேஷன் மைத்ரி என்ற பெயரில் இந்தியா நேபாளத்தில் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.நேபாளத்தில் தற்போது 13 இந்திய தேசிய பேரிடர் மீட்புகுழு, 10 ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இரட்டிப்பு உதவி கோரும் நேபாளம்
மேலும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கூடுதல் உதவிகளை எதிர்பார்ப்பதாக நேபாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேபாள மீட்புப் பணிகளில் இந்தியாவும் சீனாவும் முதலில் களமிறங்கின. அமெரிக்கா 10 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்திருந்தது. தற்போது நேபாள ராணுவ தளபதி பினோ பஸ்னியாத், சர்வதேச நாடுகள் தங்களது உதவிகளை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாட்டிறைச்சி உணவா?
இதனிடையே நேபாளத்துக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் மாட்டிறைச்சி உலர் உணவு இருந்ததாக சர்ச்சை வெடித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு இதனை மறுத்துள்ளது. நேபாளத்தைப் பொறுத்தவரை பசுவதை செய்தாலோ மாட்டிறைச்சி உண்டாலோ 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மறுப்பு
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம், ஏப்ரல் 26-ந் தேதியன்று பாகிஸ்தான் மருந்துப் பொருட்களை முதலில் அனுப்பி வைத்தது. இவை சி-130 ரக விமானங்கள் இரண்டின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 2வது கட்டமாக உலர் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏப்ரல் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மாட்டிறைச்சி உணவுப் பொருட்கள் எதுவும் இல்லை என்றார்.
மேலும் இதில் இந்திய ஊடகங்கள்தான் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
அதிரவைக்கும் நிலநடுக்க காட்சி சிசிடிவி
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக சிசிடிவி காமிரா காட்சி ஒன்று வெளியாக நெஞ்சை பிளப்பதாக இருக்கிறது.. ஒரு நெடுஞ்சாலையில் வழக்கமாக பயணிகள் வாகனங்களில் பயணிக்கின்றனர்... கால் டாக்சி, ஆட்டோக்களில் ஏற பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.. திடீரென நிலம் அதிர்கிறது.. அடுத்தடுத்து பலமாக அதிர்கிறது...
சாலையோர கட்டிடம் ஒன்று அப்படியே நெடுஞ்சாலை மீது விழுகிறது.. சாலையில் சென்று கொண்டிருந்த தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார்.. அந்த சாலையே பாளம் பாளமாக பிளந்து கிடக்கிறது.. இப்படியான ஒரு கொடூர காட்சிதான் தற்போது வெளியாகி உள்ளது...
நேபாளத் துயரம் முடிவுக்கு வருவது எப்போதோ?
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications