சீனா VS அமெரிக்கா: நேபாளத்தில் ஆட்சியை கவிழ்த்தது டிரம்பா? வெளியான பரபரப்பு தகவல்
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டம் வன்முறையானது. இந்த போராட்டத்தை தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமர் கேபி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பதோடு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கேபி சர்மா ஒலியின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நேபாளத்தை மையப்படுத்தி சீனா - அமெரிக்க இடையே நடந்த பிரச்சனை பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இங்கு பிரதமராக இருப்பவர் கேபி சர்மா ஒலி. இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டு கொண்டவர். சீனாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் அடங்கும். இந்த சமூக வலைதளங்களின் தடைக்கு இளம் வயதினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜினாமா செய்த நேபாள் பிரதமர்
இதையடுத்து நேற்று அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். இது வன்முறையானது. இதையடுத்து சமூக வலைதளங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டது. இருப்பினும் இளைஞர்கள் விடவில்லை. போராட்டம் - வன்முறையை தொடர்ந்தனர். இந்த வன்முறை இன்று 2வது நாளாகவும் நீடித்தது. இன்று அரசியல் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியல் தலைவர்களின் வீடு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் தீவைத்து எரிக்கப்பட்டது.
இதனால் வேறு வழியின்றி அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடங்கிய இளைஞர்கள் போராட்டம் திடீரென்று ரூட் மாறியது. கேபி சர்மா ஒலி ஊழல் ஆட்சி நடத்துகிறார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு பயந்து கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னணியில் அமெரிக்கா?
இந்நிலையில் தான் நேபாளில் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்காவின் உள்ளடி வேலை தான் கேபி சர்மா ஒலியின் பிரதமர் பதவியை பறித்து இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாகவே நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த போராட்டத்தை காரணமாக வைத்து அமெரிக்கா தனது வேலையை காட்டலாம்.
குறிப்பாக சீனாவுக்கு ஆதரவாக கேபி சர்மா ஒலியின் ஆட்சியை கவிழ்த்து அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள மன்னர் ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வரலாம் என்று ஏற்கனவே சிலர் எச்சரித்து இருந்தனர். இப்போது கேபி சர்மா ஒலியின் ஆட்சி கவிழ்ந்து உள்ளதால் அதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவுடன் நெருக்கம்
அதாவது ராஜினாமா செய்த கேபி சர்மா ஒலி சீனாவுடன் நெருக்கம் காண்பித்தார். வழக்கமாக நேபாளத்தின் பிரதமர் நம் நாட்டுடன் இணக்கமாக இருப்பார்கள். பிரதமராக பொறுப்பேற்பவர்கள் முதல் நாடாக இந்தியாவுக்கு தான் வருவார்கள். ஆனால் கேபி சர்மா ஒலி சீனாவுடன் பந்தம் கொண்டாடினர். 2024 ஜூலை மாதம் அவர் 4வது முறையாக பிரதமர் ஆனதுமே முதல் நாடாக அவர் சீனாவுக்கு தான் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது ஜி ஜின்பிங்கின் செல்ல புராஜெக்ட்டான பிஆர்ஐ எனும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி கட்டமைப்பு திட்டத்தில் கையெழுத்திட்டார். தெற்காசிய பிராந்தியத்தில் சீனா பிற நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த திட்டத்தை பயன்படுத்தி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் இலங்கைக்கும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் சீனா கடன் வழங்கியது. அதனை இலங்கை கட்ட தவறி கடந்த 2022ம் ஆண்டில் கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதையும் மீறி கேபி சர்மா ஒலி கையெழுத்திட்டதால் சீனா ரூ.341 கோடியை (41 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கியது. இதனால், கடந்த ஓராண்டுக்கு மேலாக சீனாவுடன் மிகவும் இணக்கமாக செயல்பட்டு வந்தார்.
அமெரிக்கா கொடுத்த நிதி
இதனை அமெரிக்கா விரும்பவில்லை. தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. அதன்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபரானதுமே, Millennium Challenge Nepal Compact என்ற திட்டத்தின் கீழ் நேபாளத்துக்கு ரூ.4,715 கோடியை (500 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனாக வழங்கியது. நேபாளத்தில் ரோடு மற்றும் எரிசக்தி துறையை மேம்படுத்தும் வகையில் இந்த தொகையை டிரம்ப் கடனாக வழங்க ஒப்புதல் வழங்கினார்.
டிரம்பின் இந்த செயல் நேபாளத்தில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு போட்டியாக அமைந்தது. இதனால் நேபாளத்தை மையப்படுத்தி சீனா - அமெரிக்கா இடையே ஆதிக்க போட்டி ஏற்பட்டு வந்தது. இப்படியான சூழலில் தான் கடந்த 4ம் தேதி இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் சீனாவில் ராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடந்தது.
டிரம்பை கோபமாக்கிய நிகழ்வு
இந்த நிகழ்ச்சி என்பது அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்தினார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 20க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் நேபாளத்தின் பிரதமர் கேபி சர்மா ஒலியும் ஒருவர். இது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க எதிர்ப்பில் சீனாவுடன் நேபாளம் இருப்பதை உறுதி செய்தது தான் அமெரிக்காவை டென்ஷனாக்கியது.
இந்த நிகழ்ச்சி என்பது அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்தினார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 20க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் நேபாளத்தின் பிரதமர் கேபி சர்மா ஒலியும் ஒருவர். இது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க எதிர்ப்பில் சீனாவுடன் நேபாளம் இருப்பதை உறுதி செய்தது தான் அமெரிக்காவை டென்ஷனாக்கியது.
ஆட்சியை கவிழ்த்த அமெரிக்கா?
இதனால் தற்போது நேபாளத்தின் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஹசீனா அரசுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி அவரை ராஜினாமா செய்ய வைத்தனர்.அதன் பின்னணியில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு இன்று வரை உள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது நேபாள் பிரதமர் கேபி சர்மா ஒலி ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னணியில் டிரம்ப் இருக்கலாம் என்ற சந்தேகத்தை சர்வதேச அரசியல் நிபுணர்கள் கிளப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications