இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் - மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் நேபாள பிரதமர் சர்மா ஒலி
இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
காத்மண்டு: மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார்.
இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தினால் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சர்மா ஒலி, மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும்.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 14ஆம் தேதி இந்தியா செல்கிறார். அப்போது அவர் 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைபடம் குறித்து ஆலோசனை நடத்துவார்.
இறையாண்மை சமத்துவத் தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சில விவகாரங்களில் நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக் கூடாது என்றும் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா நேபாள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எல்லை பிரச்சினையை எழுப்பியுள்ள சர்மா ஒலியின் கருத்து மீண்டும் இந்தியா நேபாள எல்லைப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications