“ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரை கொன்று விட்டோம்..” இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு! முடிவுக்கு வரும் போர்!
ஹமாஸின் காசா தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். ஹமாஸை ஒழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்த கொலை போருக்கான முடிவாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முகமதுவுக்கு முன்னதாக, ஹமாஸின் தலைவராக யஹ்யா சின்வார்தான் இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஹமாஸின் தலைவராக யஹ்யா சகோதரரும், ஹமாஸ் இயக்கத்தின் படை தளபதிகளில் ஒருவருமான முகமது சின்வார் உயர்த்தப்பட்டார்.

இந்நிலையில் முகமதுவையும் கொன்றுள்ளதாக நெதன்யாகு கூறியிருக்கிறார். இது பற்றி ஹமாஸ் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த கொலையுடன் பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதலை தொடங்கியது. அதற்கு முன்னர் வரை ஏராளமான தாக்குதலை காசா மீதும், பாலஸ்தீன மக்கள் மீதும் இஸ்ரேல் தொடுத்து வந்தது. இப்படி இருக்கையில் ஹமாஸின் தாக்குதல் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஏராளமான இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தாக்குதலில் 1300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறினாலும் அதற்கான ஆதாரங்களை பொது வெளியில் அது காட்டவில்லை.
இதனையடுத்து ஹமாஸை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறி இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், ஏறத்தாழ 53,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஹமாஸை அழிப்பது மட்டும்தான் தங்களது ஒரே நோக்கம் என்று இஸ்ரேல் கூறி வந்த நிலையில் கடந்த 2024ம் அண்டு அக்டோபரில் அப்போதைய ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை கொலை செய்தது.
இத்துடன் இந்த போர் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போரை தொடர்ந்து நடத்தியது இஸ்ரேல். இருப்பினும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இது அமெரிக்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹாவர்ட் பல்கலையில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை கொடுக்க கூடாது என்றும் முழக்கமிட்டனர். இப்படியாக சர்வதேச நெருக்கடி காரணமாக இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
3 கட்டங்களாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பிலிருந்தும் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2வது கட்டத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது. எனவே தற்போது போர் தீவிரமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஹமாஸை ஒழிப்பதுதான் நோக்கம் என்று சொல்லிக்கொள்ளும் இஸ்ரேல், இனியாவது போரை நிறுத்துமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications