நேதாஜியின் ஐ.என்.ஏ. படை தளபதி புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் காலமானார்!
கோலாலம்பூர்: இந்திய தேசிய விடுதலை போராட்ட படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிகமிருந்த படைக்கு புவான்ஸ்ரீ ஜானகி ஒரு படைத்தளபதியாக பணியற்றினார்.
இந்தியாவின் விடுதலைக்காக அவர் ஆற்றிய சேவைக்காக 2000ம் ஆண்டில் இந்தியாவின் அன்றைய குடியரசு தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் டெல்லியில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
இந்திய விடுதலைக்காக நேதாஜி தலைமை தாங்கி நடத்திய இந்திய தேசிய விடுதலை போராட்டப்படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார். அவருக்கு வயது 93.
அவரது உடலுக்கு மலேசிய இந்திய தூதரக அதிகாரி குருமூர்த்தி, இந்திய தூதரின் பாதுகாப்பு ஆலோசகர் பிரவீன் குமார் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்திய தேசிய ராணுவத்தில் படைத்தளபதியாக பணியாற்றிய வீரமங்கை என்று அவர் மலேசிய மக்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புவான்ஸ்ரீ ஜானகி அம்மையாருக்கு ஈஸ்வர் என்ற மகனும், கவுரி என்ற மகளும் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications