வட்டமே வட்டாரமா வரும்போது....இப்படி ஒரு பிரதமரா?.. காய்கறி பையுடன்!
ஆம்ஸ்டர்டாம்: நமது நாட்டில் பிரபல கட்சிகளின் வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்களே சொகுசு காரில் அடியாட்கள் பலம் சூழ வலம் வரும் இந்த காலத்தில் நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே பாதுகாவலர் துணையின்றி தனியாக காய்கறி பையுடன் வந்து வேண்டியதை வாங்கி செல்கிறார். இதை அந்த நாட்டு மக்கள் சாதாரணமாக கடந்து போகிறார்கள்.
நம் நாட்டில் ஊழல் என்பது சர்வ சாதாரணம், அதை விட சர்வ சாதாரணமான விஷயம். எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத அரசியல் கட்சி பிரமுகர்கள் கோடி கோடியாய் பணம் வைத்துக்கொண்டு ஜாலியாக வலம் வருவார்கள். ஊரில் உள்ள அரசு கட்டிட ஒப்பந்தகளை எடுப்பது அல்லது அதில் கமிஷன் பெறுவது என கல்லாக்கட்டிக்கொண்டு வட்டச்செயலாளர்கள் கூட பத்து பவுன்சர்களுடன் பந்தாவாக வலம் வருவது வாடிக்கை
ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் மிக சாதாரணமாக வந்து தனக்கு வேண்டியதை காய்கறி கடையில் வந்து வாங்கி சென்றிருக்கிறார். அதுவும் தன்னுடைய பாதுகாவலர்கள் யாரும் இன்றி வந்து சென்றுள்ளார். இது நெதர்லாந்து நாட்டில் நடந்துள்ளது. நார்வே நாடு உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் டாப் 5 இடங்களுக்குள் இருக்கும்.

நெதர்லாந்து வீடியோ
நெதர்லாந்து தமிழன் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: இன்று சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதை பார்க்கும் போது கை கால் எல்லாம் உதறுகிறது. டென்னாகு என்ற ஒரு நகரம் இங்கு உள்ளது . இங்கு நான் ஒரு வீடியோ பண்ணலாம் என்று வந்தேன். வந்த இடத்தில் காபி குடிக்கலாம் என்று காரை நிறுத்திவிட்டு இங்கு வந்தேன்.

சாதாரணமாக செல்கிறார்
அப்போது பார்த்தால் இந்த நாட்டுடைய (நெதர்லாந்து ) பிரதமர் மார்க் ருட்டே மிக கேசுவலாக நடந்து போய்கொண்டிருக்கிறார். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று கிட்ட போய் பார்த்தால் உண்மையிலேயே பிரதமர் தான். போய் கைகொடுத்து, உங்களை பார்த்த சந்தோஷத்தில் கை கால் எல்லாம் உதறுகிறது என்று நெகிழ்ந்து அவருடன் போட்டோ எடுத்துவிட்டு பேசினேன் என்று கூறி வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

நெகிழ்ச்சி
அந்த வீடியோவில் இவர் தான் நெதர்லாந்து பிரதமர் என்று கூறி அறிமுகம் செய்யும் நர்வே தமிழர், கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தன்னை இந்தியர் என்றும், நெதர்லாந்தில் வசிக்கும் தான் இந்த நாட்டின மீது அதிக மதிப்பும், அன்பும் வைத்துள்ளதாக கூறினார். மேலும் நெதர்லாந்து பிரதமரிடம் அவர், இந்த நாடு தான் உலகின் தலை சிறந்த நாடு என்றும் கூறிகிறார். நார்வே தமிழரின் பேச்சை கண்டு மகிழ்ந்த நெதர்லாந்து பிரதமர், உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன், நன்றி என்பது போல் வணக்கம் வைக்கிறார். இப்படியாக முடிகிறது.

மகிழ்ச்சி
இந்த வீடியோ குறித்து நெதர்லாந்து தமிழர் கூறும் போது, நீங்கள் வீடியோவில் பார்த்தவர் நெதர்லாந்து நாட்டு பிரதமர், ஐரோப்பாவில் நெதர்லாந்து முக்கியமான நாடு. இந்த நாட்டின் பிரதமர் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல், செக்யூரிட்டி இல்லாமல் கேசுவலாக நடந்து வருகிறார். ஆல்பர்டைன் என்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு பேக் எடுத்து வருகிறார். சாதாரணமாக கடைக்குள் போகிறார். இதை நம்புவதா இல்லையா என்று தெரியாத அளவிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

கனவு நிறைவேற்றம்
ஏனெனில் முக்கியமான ஆள் என்றாலே நான்கு ஐந்து செக்யூரிட்டி கூடவே வருவார்கள். ஆனால் பாதுகாவலர்களே இல்லாமல் வெகுஇயல்பாக வந்து செல்கிறார். உண்மையிலே பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்வில் இந்த நாட்டின் பிரதமரை சந்திப்பேன் என்றெல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை. அந்த கனவு இப்போது சர்ப்பைரஸ் ஆக நிறைவேறி உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications