புல்லட் புரூப் பேஷன் உடைகள் விற்பனையில்.. விலை ரூ.1.6 லட்சம் மட்டுமே
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் குண்டு துளைக்காத ஃபேஷன் உடைகள் விற்பனை செய்யும் கடை திறக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள எய்ந்தோவன் நகரில் பனமெரா என்ற குழுமம் குண்டு துளைக்காத ஃபேஷன் உடைகள் விற்பனை செய்யும் கடையை திறந்துள்ளது. இத்தகைய கடை நெதர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த கடையில் கொலம்பியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் குண்டு துளைக்காத ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த ஆடைகள் பார்ப்பதற்கு சாதாரண ஆடைகளைப் போன்றே உள்ளது.
இது குறித்து ஆடை தயாரிக்கும் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஸ்டாஸ் டி விக்ஸ் கூறுகையில்,
குண்டு துளைக்காத ஆடைகள் நகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட ஆபத்து ஏற்படும் இடங்களில் பணிபுரிவோருக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இது குற்றவாளிகளுக்காக அல்ல என்றார்.
பனமெரா குழுமம் கூறுகையில்,
ஜனவரி மாதம் பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து குண்டு துளைக்காத ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. பாரீஸ் சம்பவத்தை அடுத்து குண்டு துளைக்காத ஆடைகள் பற்றி 150க்கும் மேற்பட்டோர் எங்களை தொடர்பு கொண்டு கேட்டனர். பெல்ஜியம் மற்றும் பிரான்ஸில் இருந்து மக்கள் எங்களை தொடர்பு கொள்கிறார்கள் என்றது.
அந்த கடையில் விற்பனையாகும் குண்டு துளைக்காத ஆடையின் குறைந்தபட்ச விலையே ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications