இந்த ஆண்டுக்குள் தேர்தல்.. திடீரென ராஜினாமா செய்த பிரதமர்! இது நெதர்லாந்து கதை - என்னதான் பிரச்சனை?
ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்து நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்காத காரணத்தால் பிரதமர் பதவியையே ராஜினாமா செய்து இருக்கிறார் மார்க் ருடே.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமராக பதவி வகித்தவர் மார்க் ருடே. அந்நாட்டில் 4 கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஆட்சி செய்து வருகிறார். நெதர்லாந்து நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ருடே, எதிர்க்கட்சிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

150 இடங்களை கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ருடேவின் இந்த ராஜினாமா முடிவு அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டுக்கு போர், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
இவர் அந்நாட்டில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்தார் மார்க் ருடே. இதற்கான கொள்கையை வடிவமைத்து புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அவரது இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு முன்னரே கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கின. இந்த கொள்கைக்கு யாரும் ஆதரவளிக்காததால் மார்க் ருடேவின் முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய மார்க் ரூடே, "ரகசியம் என்று எந்த விசயமும். புலம்பெயர்வு கொள்கை தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ராஜினாமா செய்தேன். தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால காபந்து அரசும் அமைச்சரவையும் தொடரும் என்றார்.
நெதர்லாந்து நாட்டை நாடி வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 47 ஆயிரம் பேர் கடந்து ஆண்டு அந்நாட்டுக்கு அடைக்கலம் கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டோ அடைகலம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் 200 பேருக்கு மட்டுமே நெதர்லாந்து நாட்டிற்குள் அனுமதி அளிக்க முடியும் என மார்க் ரூடே புலம்பெயர்வு கொள்கையில் மாற்றம் செய்ய முயன்றார். இதற்கு எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இன்று பிரதமர் பதவியையே ராஜினாமா செய்யும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications