உள்ளே ஒரு லைட் கிடையாது.. ஃபேன் கிடையாது.. வைரலாகும் "ஜஸ்ட் பார்ன்" குழந்தையின் ஆங்கிரி ரியாக்ஷன்!
ரியோ டி ஜெனிரோ: பிறந்த குழந்தையை அழ வைக்க மருத்துவர் முயற்சிக்கும் போது அக்குழந்தை மருத்துவரை முறைப்பது போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் போன்கள் வந்தவுடன் தற்போது மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. இந்த மீம்ஸ்களை தயார் செய்ய நல்ல கற்பனை, நகைச்சுவை உணர்வுடன் கூடிய பட்டதாரிகள் இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்கள் அனுப்பும் மீம்ஸ்கள் படித்தவுடன் குபீர் என சிரிப்பை வரவழைக்கிறது. இதை பார்த்தால் கவலையை மறந்து அனைவரும் சிரிக்கின்றனர்.

சினிமா நடிகர்கள்
அரசியல் கட்சியினர், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் என மீம்ஸ்களில் சிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மீம்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. தங்களை பற்றிய மீம்ஸ்களை பார்த்து தாங்களே சிரித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும் உள்ளனர். கோபப்படும் அரசியல்வாதிகளும் உள்ளனர்.

சாமி டு ஆசாமி
மீம்ஸ் கிரியேட்டர்கள் நித்யானந்தாவையும் விட்டு வைக்கவில்லை. பாலியல் வழக்கில் பதுங்கியிருக்கும் அவர் என்னை பற்றி மீம்ஸ் போடும் மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும் என தெரிவித்திருந்தார். சாமி முதல் ஆசாமி வரை பரவிய மீம்ஸ்கள் பிறந்த குழந்தையையும் விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கண்களில் கோபம்
கடந்த 13-ஆம் தேதி ரியோடி ஜெனிரோவில் பிறந்த குழந்தை பிறந்தவுடன் அழவில்லை. குழந்தை பிறந்தவுடன் அழுதால்தான் அது ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம். அதனால் அந்த குழந்தையை அழவைக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். அப்போது அந்த குழந்தை புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் பார்த்தது.

ஃபேன் கிடையாது
பின்னர் தொப்புள் கொடியை துண்டித்தவுடன் அழுதது. இந்த குழந்தையின் முகப்பாவத்தை அங்கிருந்த புகைப்பட கலைஞர் படமெடுத்தார். அதை பார்த்தவுடன் மீம்ஸ்கள் தானாக உருவாகிவிட்டன. இந்த குழந்தையின் புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு படத்தில் வடிவேலுவிடம் அவரது தாய் உன்னை கஷ்டப்பட்டு 10 மாதம் பெற்றெடுத்தேன்... என கூறுவார். அதற்கு வடிவேல் என்னாது கஷ்டப்பட்டு பெற்றெடுத்தியா. உள்ளே ஒரே இருட்டு லைட்டு கிடையாது, ஒரு பேன் கிடையாது, ஒரு ஏசி கிடையாது.

சிறைச் சாலை
புரண்டு படுக்க பெட் கிடையாது. பேச்சு துணைக்கு ஆள் கிடையாது. தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர ஒரு நாதி இல்லை. சரி நம்மளா போய் குடிச்சி தொலைவோம்னு பார்த்தா ஒரு சொம்பு கிடையாது. என்னா பெரிய கஷ்டப்பட்ட, கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டமாதிரி இருந்திச்சு. வடக்கும் தெரியாம கிழக்கும் தெரியாமல் சிறைச் சாலைல கிடந்த மாதிரி இருந்தேன்.

கஷ்டம்
அதுவும் எப்படி கிடந்தேன் குத்த வச்சி குரங்கு மாதிரி இருந்தேன். 2 நிமிஷம் நீ குத்த வை பார்ப்போம், குத்த வை. என்னை வச்சு நீ எவ்ளோ ஜாலியா இருந்தே. ஒரே விழாக்கள்தான், வளைக்காப்புன்ற பேர்ல வளையல் போடறது. பூச்சூடுறது, புதுப்புடவையா வாங்கி சுத்திகிறது. விருந்துங்ற பேர்ல கண்ல கிடைக்கிறதெல்லாம் உருண்டை உருண்டை சாப்பிட்டு லோடு ஏத்தி என்னை கொல்ல பார்த்ததும் இல்லாம நீ கஷ்டப்பட்டியா என கேட்பார்.
|
காமெடி
மீம்ஸ்களை பார்க்கும் போது இந்த காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
எவன்டா அது அழுதுட்டு வெளிய வரும் போது சூப்பர் னு கை தட்னது....!
கோவக்காரna இருப்பானோ
— Jo (@Jo17187412) February 22, 2020
கோவக்காரna இருப்பானோ
எந்த டாக்குமெண்டும் இல்லாம உள்ள நிம்மதியா இருந்தேன்.. குந்தானிங்க வெளிய எடுத்து குடியுரிமைல மாட்டி விட்டுட்டாளுங்க...😢😢 pic.twitter.com/JFH4KM8NeK
— Chanu Z (@chanu_z) February 20, 2020
எந்த டாக்குமெண்டும் இல்லாம உள்ள நிம்மதியா இருந்தேன்.. குந்தானிங்க வெளிய எடுத்து குடியுரிமைல மாட்டி விட்டுட்டாளுங்க... என மீம்ஸ்கள் சிரிக்க வைக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications