"முகம் சுளிக்க வைக்கும் செயல்.." சபாநாயகரை பார்த்து கண் அடித்த ட்ரூடோ.. ஒரு பிரதமர் இப்படி செய்யலாமா
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரிசையாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இப்போது அவர் மற்றொரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
கனடாவுக்கு, குறிப்பாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இது போதாத காலம் போலத் தெரிகிறது. வரிசையாக அவர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். முதலில் காலிஸ்தான் கொலையாளி விவகாரத்தில் இந்தியாவை ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டினார்.

அடுத்து ஹிட்லரின் ராணுவத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிக்குக் கனடா நாடாளுமன்றத்தில் வைத்து மரியாதை கொடுத்தார். இந்தச் சூழலில் இவர் இப்போது அடுத்த அவர் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்ச்சை: கனடா நாடாளுமன்றம் இப்போது நடைபெற்று வரும் நிலையில், அதில் தான் ஜஸ்டின் ட்ரூடோவின் நடத்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது நடத்தை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கனடா நாடாளுமன்றத்தில் இப்போது கிரெக் ஃபெர்கஸ் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரை பார்த்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விளையாட்டாக நாக்கை நீட்டி கண் அடிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சபாநாயகர் என்பவர் அவையை வழிநடத்தும் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவரை பார்த்து ட்ரூடோ இப்படிச் செய்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது: கனடாவில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் இருக்கிறது. அங்கு தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது சபாநாயகர் ஃபெர்கஸ் பிரதமர் ட்ரூடோவை "மாண்புமிகு பிரதமர்" என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது பிரதமர் ட்ரூடோ மிகவும் மாண்புமிகு பிரதமர் என அழைக்க வேண்டும் என்பது போலச் சொல்லி கண் அடிக்கிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
கனடா நாடாளுமன்ற வழக்கப்படி சபாநாயகரை அந்நாட்டின் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் தான் அழைத்து வர வேண்டும். அதன்படி புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கிரெக் ஃபெர்கஸை இருவரும் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிகழ்வு ஆரம்பித்த சமயத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு தரப்பினர் ட்ரூடோ விளையாட்டாகவே இப்படிச் செய்ததாகக் கூறி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் நாடாளுமன்றம் என்பது மக்கள் மன்றம்... அங்கே பிரதமர் பதவியில் இருப்பவர் இப்படிச் செய்வது நாடாளுமன்றத்தையே கேலிக்கூத்தாக்குவதாக அமையும் எனக் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் நாடாளுமன்றத்திலேயே விளையாட்டுத்தனமாக இருக்கும் இவர் சொல்லும் குற்றச்சாட்டுகளை எப்படி சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியும் எனக் கேட்டு வருகின்றனர்,
சர்ச்சை 1: கனடா பிரதமர் கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கி வருகிறார். முதலில் அவர் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சம்பவத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது. இருப்பினும், ஆதாரத்தை வெளியிட மறுத்த கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டியே வருகிறது.
சர்ச்சை 2: அடுத்து சில நாட்களில் அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் கனடாவுக்குச் சென்றிருந்தார். அப்போது திடீரென உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை நாடாளுமன்றத்தில் வைத்துக் கவுரவித்தனர். இதில் விஷயம் என்னவென்றால் அவர் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்து ஹிட்லரின் நாஜி ராணுவத்தைச் சேர்ந்தவர். இதற்கு உலகெங்கும் இருக்கும் யூதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்ப அவர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications