"எப்போதும் தனிமை.. எரிந்து விழும் பெற்றோர்.." உலகை உறைய வைத்து தென் கொரிய சிறுவன்! ஷாக் வீடியோ
சியோல்: வேலை, வேலை என்று நாம் ஓடிக் கொண்டே இருந்தால் குடும்ப உறவுகள் எவ்வளவு பாதிக்கப்படும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.
தென் கொரியாவில் ஒளிபரப்பாகும் 'மை கோல்டன் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சி ரொம்பவே பிரபலமானது. அங்கே கடந்த நவ.21ஆம் தேதி இந்த 'மை கோல்டன் கிட்ஸ்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசோட் அனைவரையும் அதிர வைப்பதாக இருக்கிறது.

அந்த எபிசோட்டில் இருந்து வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் 4 வயது சிறுவனான கியூம் ஜி-யூன் என்ற சிறுவன் பேசிய பேச்சு அனைவரது மனதையும் நெகிழ வைப்பதாக இருந்தது.
ஷாக் வீடியோ: அந்த வீடியோவில் கியூம் ஜி-யூன் என்ற அந்த சிறுவன் தனது பெற்றோர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது உடைந்து அழ தொடங்கினார். 'மை கோல்டன் கிட்ஸ்' என்ற இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் ஒரு நிகழ்ச்சியாகும். அதில் தான் இந்த 4 வயது சிறுவன் கியூம் ஜி-யூன் தனிமையில் தவிப்பதாகத் தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் சிறுவனிடம் உனக்கு அப்பா, அம்மா இருவரில் யாரைப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த சிறுவன், "எனக்குத் தெரியவில்லை.. வீட்டில் நான் எப்போதும் தனியாகத் தான் இருப்பேன். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள். தனியாகவே எப்போதும் இருப்பேன்" என்கிறார். அந்த சிறுவன் எந்தளவுக்குச் சோகமாக இருக்கிறான் என்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது.
அப்பா, அம்மா: அப்பா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது தந்தை கோபமாக இருக்கும் போது அச்சுறுத்தும் வகையில் இருப்பார் என்றும் தன்னிடம் அன்பாகப் பேச வேண்டும் என்று நினைப்பதாகவும் அந்த சிறுவன் தெரிவித்தார். தாய் குறித்து கேட்ட போது, "அவருக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்" என்று கூறும் போது அந்த சிறுவனின் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது.
சிறுவன் சொன்னது என்ன: அதன் பிறகு சில நொடிகள் அமைதியாக இருந்த அந்த சிறுவன் மீண்டும் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசத் தொடங்கினான். "என் அம்மா நான் சொன்னதை எப்போதும் கேட்டதே இல்லை. எனக்கு அவருடன் விளையாட வேண்டும் என ஆசை. ஆனால், அவர் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்.
ஒரு முறை நான் கலை சார்ந்த பள்ளியில் படிக்க வேண்டும் எனச் சொன்னேன். அதற்கு என்ன அம்மா, நான் பார்க்க அழகாக இல்லை என்றும் இதனால் கலை பள்ளிக்கெல்லாம் அனுப்ப முடியாது" என்று கூறினார்.
விவாதம்: இந்த வீடியா தான் இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குழந்தைகளை முறையாக வளர்க்க முடியவில்லை என்றால் எதற்காகப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் சாடினர். பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த சிறுவனுக்கு இருந்த முதிர்ச்சியில் சிறியளவில் கூட அவர்கள் பெற்றோருக்கு இல்லை என்றும் சாடியுள்ளனர்.
I saw this I cried all night like damn pic.twitter.com/cdobMFnUqv
— Cindy ✨JUNGKOOK GF (@HobilovesCindy) November 20, 2023
அந்த வீடியோவில் அந்த சிறுவனின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதில் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை என்றும் பாட்டியிடம் தான் குழந்தை வளர்வதாகவும் அவர்கள் தெரிவித்தார்.
முடிவு என்ன: அதேநேரம் தாங்கள் கோபமடைவதால் இந்தளவுக்குக் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்ததே இல்லை என்றும் தெரிவித்தனர். பெற்றோருக்கு வல்லுநர்கள் ஆலோசனை கொடுத்த நிலையில், குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடப் பெற்றோர் உறுதியளிப்பதுடன் அந்த எபிசோட் நிறைவடைந்தது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications