இவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க!
ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து வெளியிடும் தம்பதியை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
லிமா: ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தம்பதியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
கெல்லி கேசில் - கோடி ஒர்க்மேன் தம்பதி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள். இருவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ள போசிட்ரேவல்டி (@positravelty ) என்ற கணக்கை, 62 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்த தம்பதியின் முக்கியமான வேலையே ஊர் ஊராக சென்று, போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது தான். அப்படி இவர்கள் பதிவிடும் பல போட்டோக்கள் சர்ச்சையில் சிக்கும். அவ்வப்போது நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வது இவர்களது வழக்கம்.

பாலி தீவுக்கு சுற்றுலா
சில மாதங்களுக்கு முன்பு கெல்லியும், கோடியும் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு இன்பினிட்டி பூல் எனப்படும் நீச்சல் குளத்தில் மிகவும் ஆபத்தான வகையில் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அந்த போட்டோவில், நீச்சல் குளத்திற்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் கெல்லியை, நீச்சல் குளத்தில் இருந்தபடி தாங்கி பிடித்திருக்கிறார் கோடி.

கடும் எதிர்ப்பு:
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என கேட்டு விளாசினர். மேலும், அது ஏன் எப்போதும் பெண்களை மட்டும் ரிஸ்க் எடுக்க வைக்கிறீர்கள்? என காய்ச்சி எடுத்துவிட்டனர்.
|
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில் இதே தம்பதி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை, பெரு நாட்டில் உள்ள லகுனா ஹுமன்தே எனும் இடத்தில் ஒரு மலை உச்சியில், அந்தரத்தில் தொங்கியபடி இருவரும் போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, மீண்டும் நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளனர்.

திட்டும் நெட்டிசன்கள்
"நீங்கள் செய்வது வெறும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செயல் மட்டுமே. இந்த புகைப்படத்தால் எங்களுக்கு எந்த பயணும் இல்லை", என அவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர். ஆனால் இதை பற்றி எல்லாம் கெல்லி தம்பதி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications