For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா, பாகிஸ்தான் அணு சக்தி வல்லமை கொண்ட நாடுகளா? முடியவே முடியாது என மறுக்கும் சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்:இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை, அணு ஆயுத நாடுகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்உன்னும் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்து கொண்டனர். உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பில் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

அவர்கள் இருவரின் சந்திப்பின் போது வடகொரிய அணு ஆயுதங்களை கை விடுவது குறித்து தெளிவான செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அதே நேரத்தில் 48 நாடுகள் உறுப்பினர்களாக இருந்து வரும் அணுசக்தி கூட்டமைப்பில் இந்தியாவை சேர்க்க சீனா வெகுகாலமாக இடையூறு செய்து வருகிறது.

ஆர்எஸ்எஸ், சிபிஐயை குறி வைத்து ஐஎஸ் இயக்கம் தாக்குதல் திட்டம்? என்ஐஏ திடுக் தகவல்ஆர்எஸ்எஸ், சிபிஐயை குறி வைத்து ஐஎஸ் இயக்கம் தாக்குதல் திட்டம்? என்ஐஏ திடுக் தகவல்

அணு ஆயுத நாடா?

அணு ஆயுத நாடா?

இந் நிலையில், இந்தியா, பாகிஸ்தானை போல, வட கொரியாவையும் அணு ஆயுத நாடாக சீனா அங்கீகரிக்குமா? என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அந்தஸ்து கிடையாது

அந்தஸ்து கிடையாது

அதற்கு அவர் கூறியதாவது:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை ஒரு போதும் வழங்கியதில்லை. இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.

பேச்சுக்கே இடமில்லை

பேச்சுக்கே இடமில்லை

நாங்கள் எப்போதும் மாறியதில்லை. எனவே, வட கொரியாவையும் அணு ஆயுத நாடாக சீனா அங்கீகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

48 நாடுகள் உறுப்பினர்கள்

48 நாடுகள் உறுப்பினர்கள்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததை காரணம் காட்டி, 48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா இணைவதை சீனா தடுத்து வருகிறது. இந்தச் சூழலில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
China Foreign Ministry spokesperson Lu Kang said that the country never recognized India and Pakistan as the nuclear weapon states. China's position on the Treaty on the Non-proliferation of Nuclear Weapons remains firm and unchanged, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X