ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்.. பிறக்கும் போதே கொரோனா.. எப்படி சாத்தியம்.. மருத்துவர்கள் குழப்பம்
மெக்சிகோ: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இப்படி நடக்கவில்லை என்பதால் மெக்சிகோ சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மெக்சிகோவில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் குறைபிரசவத்தில் கடந்த 17-ஆம் தேதி பிறந்தன. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அந்த குழந்தையின் பெற்றோருக்கு சில நேரத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் அந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதுவரை குழந்தை பிறந்த நாளன்று கொரோனா ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை என்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா
மெக்சிகோவில் கொரோனாவால் 1.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா என்பதால் மருத்துவர்களுக்கு இது எப்படி என்பது புரியவில்லை. அதாவது புதிதாக குழந்தை பிறந்த அதே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்படாது.

குழந்தைகள்
கொரோனா தொற்றுடையவர்கள் குழந்தைகளை பார்க்க வரும் போது அவர்களால் மட்டுமே கொரோனா தொற்று ஏற்படும்ய இல்லாவிட்டால் தாயிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த குழந்தைகளை யாரும் தொடவில்லை. 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தையும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆதாரம் இல்லை
இந்த குழந்தைகளுக்கு தாயின் நஞ்சுக் கொடி வழியாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். கொரோனா தொற்று இதுவரை கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதற்கோ கர்ப்பத்தில் கரு வளரும் போது பாதிப்பு ஏற்படும் என்பதற்கோ ஆதாரம் இல்லை.

மருத்துவர்கள்
இரு குழந்தைகளின் உடல்நலமும் சீராக உள்ளது. இன்னொரு ஆண் குழந்தை மட்டும் நுரையீரல் பிரச்சினைக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணிகள் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications