"பேரழிவு" உறுதி! சீன ஆய்வகத்தில் புதிய வகை கொரோனா! கொஞ்சம் மிஸ்ஸானாலும் ரிஸ்க்! ஆய்வாளர்கள் வார்னிங்
பெய்ஜிங்: உலகெங்கும் இப்போது கொரோனா வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் மற்றொரு பெருந்தொற்றை வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. இந்த புதிய HKU5-CoV-2 வைரஸ் ஒரு சிறிய பிறழ்வு ஏற்பட்டாலும் கூட அது மனிதர்களிடையே பரவி மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீனாவில் ஆரம்பித்த இது உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாடும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை. இதனால் பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், பொருளாதார பாதிப்பும் கூட மிகக் கடுமையாக இருந்தது.

கொரோனா
டாக்டவுன், தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே நாம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளோம். அதேநேரம் இன்னுமே கொரோனா ஏற்படுத்திய வடுவும் பொருளாதார பாதிப்பும் முழுமையாக நீங்கவில்லை. இதற்கிடையே ஆய்வாளர்கள் மீண்டும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை கொரோனாவை கண்டறிந்துள்ளது.
மீண்டும் சீனா
இப்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு மற்றொரு பெருந்தொற்றை வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. இந்த புதிய HKU5-CoV-2 வைரஸ் ஒரு சிறிய பிறழ்வு ஏற்பட்டாலும் கூட அது மனிதர்களிடையே பரவி மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இந்த திரிபு லேசாக உருமாற்றம் அடைந்தாலும் கூட மனிதர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கொரோனா பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை தான் கோவிட் 19 பெருந்தொற்றை ஏற்படுத்தியது. 2000களில் வேறு வகை கொரோனா மெர்ஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் HKU5-CoV-2 என்ற கொரோனா வகை மீண்டும் பேரழிவை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
33% உயிரிழப்பு
இந்த வைரஸில் கண்டறியப்பட்ட நோய்க்கிருமி, பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொல்லக்கூடிய மிகவும் ஆபத்தான வைரஸான MERS உடன் நெருக்கமாகத் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த HKU5 வைரஸும் சீன ஆய்வகத்தில் உள்ள வௌவால்களில் காணப்பட்டுள்ளது. வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த தனித்துவமான நோய்க்கிருமிகள் மனித செல்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏன் ஆபத்து
இந்த ஆய்வை இணைந்து நடத்திய வைரஸ் நிபுணர் பேராசிரியர் மைக்கேல் லெட்கோ இது குறித்துக் கூறுகையில், இந்த வைரஸ்கள் மனித செல்களில் தொற்றுநோயை ஏற்படுத்தலாம். HKU5 வைரசின் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் மனிதர்களில் உள்ள ACE2 செல்களை பாதிக்கக்கூடும். இவை பொதுவாகத் தொண்டை, வாய் மற்றும் மூக்கில் காணப்படுகின்றன. இது கிட்டதட்ட கொரோனா போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.
இப்போதுள்ள HKU5-CoV-2 திரிபு வௌவால்களில் மட்டுமே பரவுகிறது. ஆனால், அவை லேசாக உருமாற்றம் அடைந்தாலும் அது மனிதர்களிடையே பரவி மிக மோசான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வாய்ப்புகள் அதிகம்
ஈரப்பதம் நிறைந்த சூழல் தான் HKU5-CoV-2 இனப்பெருக்கம் செய்யக் களமாகச் செயல்படுகிறது.. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கான ஹோஸ்டாக இருக்கும் என்றும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மெர்ஸ் பாதிப்பைப் போலவே இருக்கிறது. இது மனிதர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாகும்.
இந்தியா உட்பட ஆசியாவில் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் மீண்டும் மனிதர்களிடையே பேரழிவை ஏற்படுத்தும் வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications