யு.எஸ்.: பச்சிளம் பெண் குழந்தையை நடுத்தெருவில் எரித்துக் கொன்ற தாய்
நியூஜெர்சி: அமெரிக்காவில் பச்சிளம் பெண் குழந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பெம்பர்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஹைபர்ன்கெம்பர்லி டோர்விலியர்(22). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சைமன்டவுன் ரோட்டில் தனது பச்சிளம் பெண் குழந்தை மீது ஏதோ திரவத்தை ஊற்றி எரித்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயை அணைத்து குழந்தையை பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மணிநேரம் கழித்து குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து டோர்விலியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை.
இது குறித்து பெம்பர்டனைச் சேர்ந்த டேவ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இளம்பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி நடுத்தெருவில் வைத்து எதையோ எரித்தார். என்ன எரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாயின் கழிவை எரிப்பதாக தெரிவித்தார். அந்த பெண் பதட்டமின்றி இருந்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications