2 ஆக பிரியும் ஆப்ரிக்க கண்டம்? புதிதாக உருவாகும் பெருங்கடல்! கண் முன் நடக்கும் அதிசயம்.. அவ்வளவுதானா
இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கி விட்டனவாம்.
நைரோபி: ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். உலகில் மிக மிக அரிதாக நடக்கும் சம்பவம் இது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் வேறு வேறு தோற்றத்தில் இருந்த நிலப்பரப்புகள் நிலநடுக்கம், சுனாமி, நில அடுக்கு நகர்வுகள், எரிமலை வெடிப்புகள் காரணமாக உருமாற்றம் அடைந்து தற்போது இருக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது.
இதன் காரணமாகவே வேறு வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி தற்போது இருக்கும் 7 கண்டங்கள் உருவாகின. நிலப்பரப்புகள் மோதியதால் மட்டுமே தற்போது இருக்கும் பல்வேறு மலைகளும் கூட தோன்றின.

ஆப்ரிக்க கண்டம்
அந்த வகையில் தற்போது இருக்கும் ஆப்ரிக்க கண்டம் பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது இரண்டாக கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலப்பரப்பு பிரியும் பகுதியில் நீர் புகுந்து அங்கே பெரிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிகிறது
ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவதை ரிப்ட் என்று கூறுவார்கள். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவது. இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, இரண்டு பகுதிகளாக மாறிவிடும் . இதுவாக இரண்டு தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நகர்வு வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இப்படி தட்டுகள் நகரும் இடைப்பட்ட இடைவெளியில் பொதுவாக கடல் நீர் நுழைவது வழக்கம்.

தண்ணீர்
அப்படித்தான் கடல்கள் உருவாகும். தற்போது கிழக்கு ஆப்ரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது. அதன்படி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளன. எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும். இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கி விட்டனவாம். African Nubian, African Somali, Arabian ஆகிய அடுக்குகள் பிரிய தொடங்கி உள்ளன. இவை சாட்டிலைட்டில் மட்டுமின்றி கண்ணால் பார்க்கும் அளவிற்கு பிளவு தென்பட தொடங்கி உள்ளது.

உருவாகும் நாடுகள்
தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது மொத்தமாக பிரிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும். பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம். ஆனாலும் அடுத்த 500 வருடத்தில் இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்கும். ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் திடீர் மாற்றங்கள் இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications