வங்கதேசத்துடன் ஆயுத டீல் பேசிய அமெரிக்கா. இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: இந்தியாவுடன் வங்கதேசம் மோதி வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேசத்துக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேசம் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு பேராபத்து வருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடந்து வருகிறது. தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது மோசமடைந்துள்ளது.

அதேவேளையில் வங்கதேசம் நமது எதிரி நாடுகளான துருக்கி, பாகிஸ்தான், சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. தற்போது கூட முகமது யூனுஸ் சீனா சென்றுள்ளார். இதற்கிடையே தான் கூடுதலாக அமெரிக்கா - வங்கதேசம் இடையே தற்போது நவீன ஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை என்பது நடந்து முடிந்துள்ளது.

new-threat-for-india-us-sells-modern-weapons-to-bangladesh

இதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்க ராணுவத்தன் துணை கமாண்டிங் ஜெனரல் அதிகாரியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் பி வோவெல் கடந்த மார்ச் 24ம் தேதி வங்கதேசம் சென்றார். அங்கு அவர் வங்கதேசத்தின் ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு இடையேயான உறவு, ராணுவ தளவாடங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து வங்கதேசத்துக்கு ராணுவ தளவாடங்கள், நவீன ஆயுதங்களை வழங்குவது பற்றி பேசப்பட்டது.

அந்த சமயத்தில் வங்கதேசத்துக்கு தேவையான அனைத்து நவீன ரக ஆயுதங்களையும் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மில்லியன் டாலர் அளவுக்கான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வங்கதேசம் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவாதம் தான் தற்போது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்கா, வங்கதேசத்துக்கு நவீன ஆயுதங்களை வழங்கும்போது அது அதன் படைபலத்தை அதிகரிக்கும். இது அண்டை நாடான நமக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

முதலில் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நல்ல உறவு என்பது இருந்தது. ஆனால் இப்போது நல்லுறவு இல்லை. ஏற்கனவே பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட எதிரிகளுடன் வங்கதேசம் கைகோர்த்துள்ள நிலையில் விரைவில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினால் அது நம் நாட்டுக்கு சவாலாக இருக்கும். நம் நாட்டை ஒப்பிடும்போது வங்கதேசத்தின் ராணுவம், கடற்படை, விமானப்படையின் பலம் என்பது குறைவானது. அதேபோல் படை வீரர்களின் எண்ணிக்கையும் குறைவானது.

இதனால் வங்கதேசம் நம் நாட்டை சீண்டினால் எளிமையாக நம்மால் அந்த நாட்டை வீழ்த்த முடியும். இருப்பினும் கூட நேரடியாக சண்டை செய்யாமல் எல்லையில் குடைச்சல் தரும் வேலையை வங்கதேசம் செய்யும் என்பதால் அமெரிக்கா - வங்கதேசம் இடையேயான நடவடிக்கைகளை நம் நாடு உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+