கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் அல்ல நியூயார்க் அபார்ட்மென்ட்களில் பதுக்கும் பண முதலைகள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கினால் இனி அது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் நியூயார்க்கில் விலை உயர்ந்த அபார்ட்மென்டுகளாக வாங்கி வருகிறார்கள் பெரும் பணக்காரர்கள்.

இந்தியர்களின் கருப்புப் பணம் கோடிக்கணக்கில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது. அந்த கருப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்திடம் அந்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. சுவிட்சர்லாந்தும் விவரங்களை அளிக்க முன் வந்துள்ளது.

இந்நிலையில் கருப்புப் பணம் வேறு வழியில் பதுக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகள்

வங்கிகள்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கினால் அரசு எப்படியும் கண்டுபிடித்துவிடும் என்று நினைத்த பண முதலைகள் புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர்.

நியூயார்க்

நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மான்ஹாட்டனில் உள்ள முக்கிய பகுதிகளில் இருக்கும் விலை உயர்ந்த அபார்ட்மென்ட்களில் 30 சதவீத அபார்ட்மென்ட்கள் ஆண்டில் 10 மாதங்களில் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கருப்பு பணம்

கருப்பு பணம்

காலியாக உள்ள அபார்ட்மென்ட்கள் வெளிநாட்டு பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை என்று தெரிய வந்துள்ளது. அதாவது கருப்புப் பணத்தை வங்கியில் போடுவதற்கு பதில் அபார்ட்மென்ட்களாக வாங்கிப் போடுகிறார்கள்.

எப்படி?

எப்படி?

பண முதலைகள் அபார்ட்மென்ட்கள் வாங்குகிறார்கள். ஆனால் அது யார் பெயரில் உள்ளது, பணம் எங்கிருந்து எப்படி வந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் படுரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் மட்டுமா?

இந்தியர்கள் மட்டுமா?

நியூயார்க்கில் இந்தியர்கள் தவிர ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களும் அபார்ட்மென்ட்கள் வாங்கிப் போடுகின்றனர்.

வீடு இல்லையே

வீடு இல்லையே

நியூயார்க்கில் பலர் வசிக்கக் கூட வீடுகள் இன்றி தவித்து வருகையில் இப்படி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மென்ட்கள் காலியாக உள்ளன.

இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

கருப்புப் பணத்தை யாருக்கும் தெரியாமல் அபார்ட்மென்டுகளாக வாங்குகிறார்கள். அப்படி வாங்குபவர்களை கண்டுபிடிப்பது இடியாப்ப சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+