For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா இல்லாத நாடு என்ற 24 நாள் சாதனை முடிவுக்கு வந்தது.. நியூசிலாந்தில் புதிதாக 2 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

வெலிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்தில் இப்போது மேலும் 2 கொரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.

நியூசிலாந்தில், கடுமையான லாக்டவுனை கொண்டுவந்து, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தினார் பிரதமர் ஜெசிந்தா. மொத்தம், 1,156 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,132 பேர் குணமடைந்தனர். 22 பேர் பலியாகிய நிலையில், நிலைமை கட்டுக்குள் வந்தது.

எனவே கடந்த 24 நாட்களாக புதிதாக எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை. கடந்த வாரம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார். எனவே கொரோனா இல்லாத நாடாக மாறி அசத்தியது நியூசிலாந்து.

கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் மரணம்.. என்ன காரணத்தால் அதிகம் பேர் பலி. பரபர பின்னணி கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் மரணம்.. என்ன காரணத்தால் அதிகம் பேர் பலி. பரபர பின்னணி

 ஆட்டம் போட்ட பிரதமர்

ஆட்டம் போட்ட பிரதமர்

மகிழ்ச்சியால், ஒரு ஆட்டம் போட்டேன் என்று பிரதமர் ஜெசிந்தா பேட்டியளித்தார். இந்த நிலையில் மேலும் 2 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது உள்ளூரில் பரவவில்லை. இங்கிலாந்திலிருந்து திரும்பிய இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

 பொருளாதார கட்டுப்பாடு இல்லை

பொருளாதார கட்டுப்பாடு இல்லை

தொற்று காலி என்பதால், கடந்த வாரம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தவிர அனைத்து சமூக மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளையும் நியூசிலாந்து நீக்கியது. கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலைக்கு திரும்பிய உலகின் முதல் நாடுகளில் ஒன்று நியூசிலாந்து என்ற பெருமையை பெற்றது.

 வெளிநாட்டிலிருந்து வருவோர்

வெளிநாட்டிலிருந்து வருவோர்

ஆனால், நியூசிலாந்து நாட்டுக்காரர்கள், வெளிநாடுகளிலிருந்து, நாடு திரும்புவதால் எதிர்காலத்தில் புதிய கேஸ்கள் வரக்கூடும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். அது இப்போது நடந்துள்ளது.

 இரு பெண்கள்

இரு பெண்கள்

நியூசிலாந்துக்கு வந்த புது நோயாளிகள் இருவருமே பெண்கள். ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து தோஹா மற்றும் ஆஸ்திரேலியாவின், பிரிஸ்பேன் வழியாக நியூசிலாந்திற்கு வந்து ஆக்லாந்தில் தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்தனர். அப்போதுதான் கொரோனா கண்டறியப்பட்டது. எனவே பிற நியூசிலாந்துக்காரர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு என்கிறது அங்குஉள்ள நிலவரம்.

English summary
New Zealand said on Tuesday that it has two new cases of the coronavirus, both related to recent travel from the UK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X