ஒரே ஒருத்தர்தான்.. 6 மாத காலத்துக்கு பிறகு "பாசிட்டிவ்".. உடனே லாக்டவுனை போட்ட நியூசிலாந்து
வெலிங்டன்: 6 மாத காலத்துக்கு பிறகு, ஒரே ஒருத்தருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. உடனே 3 நாளைக்கு முழு லாக்டவுனை போட்டுவிட்டது நியூசிலாந்து அரசு..!
கடந்த வருடம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீடித்த நிலையில் நியூசிலாந்தையும் விட்டுவைக்கவில்லை.. பாதிப்பு நிலவரம் ஓரளவு அதிகமாகவே இருந்தது.
ஆனால், அந்நாட்டு அரசு ஆரம்பத்திலேயே விழித்து கொண்டது.. அடுத்த சில மாதங்களிலேயே, உலகிலேயே தொற்றை சிறப்பாக கையாண்ட நாடுகளில் ஒன்று நியூசிலாந்து என்பதை மறுக்க முடியாது..

உயிரிழப்பு
இத்தனைக்கும் வெறும் 50 லட்சம் மக்கள் தொகையைதான் அந்த நாடு பெற்றுள்ளது.. ஆனாலும் தொற்று எப்படியோ பரவிவிட்டது.. அதனால், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, லாக்டவுன்களையும் அமல்படுத்தியது.. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு பலியாகிய நிலையில், நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்...

பாசிட்டிவ்
அதுமட்டுமல்ல, கடந்த 6 மாதமாகவே அங்கு கொரோனா கேஸ் எதுவும் பதிவாகாமலும் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரே ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டதாம்.. நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் ஆக்லாந்து என்ற நகரம் உள்ளது.. இங்கு வசித்து வந்த நபருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இவருக்கு எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாதபோதும் தொற்று எப்படி பரவியது என்று தெரியவில்லை.

அறிவுறுத்தல்
ஒருத்தருக்கு கொரோனா வைரஸ் தாக்கிவிட்டது என்றதுமே, நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, யாரும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும் உள்ளனர்.. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் ஆக்லாந்து நகரை சேர்ந்தவர் என்பதால் அந்த நகரிலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நபர் சில தினங்களுக்கு முன்பு கோரமண்டல் நகருக்கு சென்று வந்தாராம்.. அதனால் அந்த நகருக்கும் ஒருவாரத்துக்கு லாக்டவுன் போட்டுவிட்டார்கள்... இப்போது அந்த நாட்டில் அந்த நபர் மட்டும் "தனிஒருவராக" தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications