நியூசிலாந்து வானில் தோன்றிய நீல சுருள்.. ஏலியன் கதவா? குழம்பிய மக்கள்.. கடைசியில் செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வானத்தில் திடீரென ஏற்பட்ட நீல நிற சுருள்கள், இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

பிரபஞ்சம் குறித்து நாம் அறியாத விஷயங்கள் புதைந்து கிடக்கிறது. இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

குறிப்பாக வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வுகளை உலகின் டாப் நாடுகள் அனைத்தும் செய்து வருகின்றன. மேலும், எலியன்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியிலும் நாசா உள்ளிட்ட அமைப்புகள் வெளிப்படையாகவே ஈடுபட்டுள்ளது.

 நியூசிலாந்து

நியூசிலாந்து

இந்தச் சூழலில் நியூசிலாந்து வான்தில் நேற்றிரவு தோன்றிய காட்சிகள் இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது. நியூசிலாந்து நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணியளவில் அந்நாட்டு மக்கள் ஒரு மர்மமான விஷயத்தைப் பார்த்தனர். நீல நிறத்தில் இருந்த அந்த அமைப்பு பார்க்கச் சுருள் சுருளாக இருந்தது. மேலும், அது ஒரு இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருந்ததாகவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.

 மர்மம்

மர்மம்

வானத்தில் தோன்றிய இந்த பெரிய நீல நிற ஒளி சுழல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அதனைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அது குறித்த கேள்விகளையும் எழுப்பி வந்தனர். நியூசிலாந்தில் தோன்றிய இந்த நீல நிற ஒளி சுழல் தான் சமூக வலைத்தளங்களில் டிரெண்டஹ்கில் இருந்தன. இதற்கான காரணம் என நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை அடித்து விட்டுக் கொண்டு இருந்தனர்.

 நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

சிலர் இது ஏலியன்களின் பறக்கும் தட்டாக இருக்கும் என்றனர். இன்னும் சிலர் வானத்தில் தோன்றும் இந்த மர்ம சுழல் தான் வேற்று கேலக்ஸிகளுக்கு செல்லும் பாதை என்றும் இதைப் பயன்படுத்தியே ஏலியன்கள் நமது பூமிக்கு வருவதாகவும் தெரிவித்தனர். வேறு சிலரை அது உலகை விழுங்க வந்த பிளாக் ஹோல் என்ற ரீதியிலும் கூறினர். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கூறி வந்தனர்

காரணம்

காரணம்

இருப்பினும், இவை எதுவும் உண்மை இல்லை. வானத்தில் திடீரென தோன்றி அந்த மர்மப் பொருள் என்னவாக இருக்கலாம் என்பதை ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஈஸ்டர் விளக்கி உள்ளார். ஒரு ராக்கெட் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் போது சில நேரங்களில் இதுபோன்ற மேகங்கள் ஏற்படலாம் என்றார்.

எப்படி

எப்படி

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ராக்கெட் பறக்கும் போது, அதன் பின்புறத்தில் இருந்து வெளியேறும் புகையில் நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருக்கும். விண்வெளியில் இருக்கும் இது சூரிய ஒளியில் படும்போது ஒளிர்ந்து சிறு மேகத்தை உருவாக்குகிறது. ராக்கெட் செல்லும் பாதை, சூரியன் இருக்கும் இடம் என பல்வேறு காரணங்கள் சரியாக அமைந்தால் இதுபோன்ற காட்சிகள் தோன்றும். இதன் காரணமாகவே நியூசிலாந்து நாட்டில் இந்த நீல நிற சுருள்கள் ஏற்பட்டுள்ளன" என்றார்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுப்பிய ராக்கெட் இந்த சுருளை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் பேராசிரியர் ரிச்சர்ட் ஈஸ்டர் தெரிவித்தார். நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் இருந்து குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்பப்பட்டது.

 முதல்முறை இல்லை.

முதல்முறை இல்லை.

அதேநேரம் வானத்தில் இதுபோன்ற நீல நிற சுருள்கள் தோன்றுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த 2009இல், ரஷ்யா ஏவுகணை ஒன்றை ஏவிய போது, நார்வே நாட்டின் மீது பெரிய நீலச் சுருள்களை ஏற்பட்டது. காரணத்தை அறிந்து இருந்தாலும் கூட நியூசிலாந்து மக்களை இதை இணையத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+