ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி

பிரசவ வலியுடன் சைக்கிள் ஓட்டி மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுள்ளார் எம்பி

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: பிரசவ வலியுடன் சைக்கிளில் சென்று, குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு எம்பி.. இந்த செய்திதான் சோஷியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

நியூசிலாந்து நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் ஜூலி அனே ஜென்ட்டர்.. 41 வயதாகிறது.. பசுமை கட்சியை சேர்ந்தவர்..

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்தவர்.. 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறியவர்.. நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கர்ப்பிணி

கர்ப்பிணி

இந்நிலையில் இவருக்கு நேற்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.. அதனால், அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், டக்கென தன்னுடைய சைக்கிளை எடுத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பினார்.. அவரே ஓட்டிக் கொண்டு போனார்.. அவர் வீட்டுக்கு பக்கத்திலேயே ஆஸ்பத்திரி இருந்திருக்கிறது.. அதனால், வலியுடனேயே ஆஸ்பத்திரிக்கு சைக்கிளை அழுத்தி சென்றுள்ளார்.. மருத்துவமனைக்கு வந்து பத்திரமாக சேர்ந்தார்.. உடனடியாக அங்கு அனுமதிக்கப்பட்டார்...

 பேஸ்புக் பதிவு

பேஸ்புக் பதிவு

அடுத்த 10 நிமிஷத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றவுடன், ஒரு பேஸ்புக் பதிவு போட்டுள்ளார் ஜூலி.. அதில், "பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்டி செல்வேன் என்று நிஜமாகவே நினைக்கவில்லை.. அப்படி ஒரு பிளானே கிடையாது.. திடீரென வலி வரவும், நானே கிளம்பி போய்விட்டேன்.. அதிகாலை 3.04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்றோம்.. இதோ, மகிழ்ச்சியான எங்கள் குழந்தை பக்கத்திலேயே தூங்குகிறது.. அப்படியே அவள் போலவே..." என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்...

 பிரசவ வலி

பிரசவ வலி

இப்படி ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, புதுமுயற்சியை எடுத்தது ஜூலிக்கு முதல் முறை கிடையாது.. ஏற்கனவே இப்படித்தான் செய்துள்ளார்.. 2018-ல் இப்படித்தான் திடீரென பிரசவ வலி வந்துள்ளது.. அதனால் பைக்கை ஓட்டிக் கொண்டே போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி முதல் குழந்தையை பெற்றெடுத்தாராம்... தாயும், சேயும் இப்போது நன்றாக இருக்கிறார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

நியூசிலாந்து பெண் அரசியல்வாதிகள் எப்போதுமே ஏதாவது வித்தியாசமான அசத்தல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இப்படித்தான், அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா, பதவியில் இருந்தபோது 3 மாசம் டெலிவரிக்காக லீவு எடுத்திருந்தார்.. பிறகு, குழந்தையுடன் நாடாளுமன்ற கூட்டத்திலும் கலந்துகொண்டார்..

முத்தம்

முத்தம்

ஒருமுறை 3 மாத குழந்தையை ஐநாவில் நடந்த கூட்டத்துக்கும் தூக்கி வந்திருந்தார்.. கூட்டம் நடந்து முடியும்வரை, அந்த குழந்தையை அணைத்து கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் இருந்தார் ஜெசிந்தா.. சமீபத்தில்கூட, ஃபேஸ்புக் லைப் ஒன்றில் ஜெசிந்தா பேசிக் கொண்டிருந்தபோது, அவரது 3 வயதுக் குழந்தை குறுக்கிட்டது.. அப்போது குழந்தையிடம் போய் பேசாமல் படுத்து தூங்கு என்று குழந்தையிடம் ஜெசிந்தா சொன்ன வீடியோவும் வைரலாகியது.. நாட்டின் எந்த பொறுப்பை வகித்தால் என்ன? தாய்மையை மிஞ்சிய சக்தி, இந்த உலகில் இருக்கிறதா என்ன?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+