வெனிசுலாவில் கடந்த 12 ஆண்டுகளில் என்ன நடந்தது? நிக்கோலஸ் மதுரா மீது.. டிரம்புக்கு கோபம் ஏன்! விவரம்
கராகஸ்: வெனிசுலா மீது இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியிருக்கிறார். அவர் கொலை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி இருக்கையில், வெனிசுலா அதிபர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் என்ன செய்தார்? என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ், வெனிசுலாவின் மக்கள் நலத் தலைவர் ஹியூகோ சாவேஸின் நீண்டகால நண்பர் சாவேஸ் 2013-ல் புற்று நோயால் காலமான பிறகு, இவர் அதிபர் பதவியை ஏற்றார்.

பேருந்து ஓட்டுநரும், தொழிற்சங்கத் தலைவருமாக மதுரோ இருந்திருக்கிறார். என்னதாக சாவேஸுடன் மதுரோ நெருங்கி இருந்தாலும், கடந்த 2013ல் இவர் அதிபராகும்போது பெரிய அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதைப்பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தவர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாக இருந்ததால், வெனிசுலாவில் சாவேஸுக்கு பிறகு கம்யூனிஸ ஆட்சி தொடர்வதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. இதுவே அவர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.
எனவே அமெரிக்க மதுரோ ஆட்சிக்காலத்தில் வெனிசுலாவுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. இதனால், அந்நாட்டில் அமைதியின்மை, பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, எண்ணெய் வளங்களை மதுரோ சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியதாகவும் குற்றச்சாட்டு இருந்தது.
கடந்த 2017-ல், வெனிசுலா தலைநகர் காரகாஸில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய சட்டமன்றத்தை புறக்கணிக்க, ஜனாதிபதியின் அதிகாரங்களை மதுரோ விரிவாக்க முயன்றார். அதன்படி இனி 5 ஆண்டுகள் என்பதற்கு பதில் 6 ஆண்டுகள் அதிபர் ஆட்சியில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் 2018ல் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தை தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர்களும் சர்வதேச சமூகமும் கண்டிக்க, மதுரோ தேர்தலில் நின்று வெற்றி பெற்று 6 ஆண்டு கால பதவிக் காலத்தை வென்றார். ஆனால் சர்வதேச சமூகம் அதை சட்டவிரோதமானது என அறிவித்தது.
2020-ல், டிரம்ப் நிர்வாகத்தால் மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போதைய அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பார், வெனிசுலா ஆட்சி குற்றமும் ஊழலும் நிறைந்தது என்றார். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுரோ சதி செய்து, டன் கணக்கான கோகைன் அமெரிக்கவுக்குள் அனுப்பி சேதத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இதற்கு மதுரோ, டிரம்பை இனவெறியர் எனச் சாடினார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையில் மோதல் இருந்தது.
அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஜனவரியில் பதவியேற்ற பிறகு, டிரம்ப் நிர்வாகம் மதுரோ ஆட்சிக்கு எதிராக பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களை அதிகரித்தது.
மதுரோவைக் கைது செய்ய தகவல் அளிப்போருக்கு, 50 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அறிவித்தார். இதனையடுத்து மதுரோ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications