எலிசபெத் ராணிக்கு பின் மோடிக்கு கவுரவம்.. உயரிய விருது வழங்கி கவுரவித்த நைஜீரியா.. சிறப்பு இதுதான்
அபுஜா: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நைஜீரியா சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு அங்கும் வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு வழங்கினார். இந்நிலையில் தான் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு பிறகு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் பிரேசிலில் நடக்கும் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்த பயணத்தில் நைஜீரியா, பிரேசில், கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி பிரதமர் மோடி முதலில் நைஜீரியாவுக்கு சென்றுள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று நைஜீரியா புறப்பட்டார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் இன்று அபுஜா சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு அளித்தனர். அதேபோல் நைஜீரிய தரப்பில் அந்த நாட்டின் அமைச்சர் நிசம் இஜென்வொ விக் உற்சாகமாக வரவேற்றார். இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நைஜீரியா சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
இன்று நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து இருநாடுகளின் உறவு, வர்த்தகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - நைஜீரியா இடையே நல்ல உறவு உள்ளது. கடந்த 2007 முதல் இருநாடுகள் இடையேயான உறவு என்பது தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் 27 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நைஜீரியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் நைஜீரியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிகவும் முக்கிய நாடாக உள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே தான் பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நைஜீரியாவில் கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் எனும் விருது மிகவும் உயரியதாக உள்ளது. இந்த விருதை இதற்கு முன்பு மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கடந்த 1969ம் ஆண்டில் வழங்கப்பட்டது. உலகளாவிய தலைவர் என்பதை பிரதிநிதித்துவபப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி இன்று பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‛கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ாப் தி நைஜர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் எலிசபெத் ராணிக்கு பிறகு இந்த விருதை பெற்ற 2வது வெளிநாட்டு பிரபலம் என்ற பெருமைக்கு பிரதமர் மோடி சொந்தக்காரராகி உள்ளார். வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார். இதுவரை வெளிநாடுகளில் 16 உயரிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் இது 17வது விருதாக அமைந்துள்ளது.
அதன்பிறகு இன்று நைஜீரியா பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து பிரேசில் செல்கிறார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நாளை மற்றும் நாளை மறுநாள் என்று 2 நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
அதன்பிறகு பிரேசிலில் இருந்து கயானாவிற்கு பிரதமர் மோடி செல்கிறார். நவம்பர் 20, 21ம் தேதிகளில் கயானா அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். கயானாவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் நம் நாட்டின் பிரதமர் யாரும்செல்லவில்லை. இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கயானா செல்லும் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார். அதன்பிறகு கயானாவில் இருந்து நம் நாட்டுக்கு திரும்பி வருகிறார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications