நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

நைஜீரியா: நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதலில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

வட கிழக்கு நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில் நான்கு கிராமங்களை சேர்ந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது.

Nigeria's Boko Haram crisis: Maiduguri 'preachers kill dozens'

அந்நாட்டு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக எவ்வளவு பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. கோஷே, அட்டகரா, அகபல்வா மற்றும் அகஞ்சாரா ஆகிய கிராமங்களை சேர்ந்த 500 பேர் வரை பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

அப்பகுதி தீவிரவாதிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பலி எண்ணிக்கை எவ்வளவு என கண்டுபிடிக்க இயலவில்லை.அப்பகுதி முழுவதும் சடலங்கள் மிகுந்து கிடக்கின்றன. மக்கள் பலரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் பியே தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வடகிழக்கு பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 800 பேர் தங்கள் குடும்பங்களையும், மக்களையும் விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் மட்டும் இங்கு தீவிரவாதிகளின் தாக்குதலில் 3000 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+