Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமிஷாவின் கடைசி நம்பிக்கையும் வீண்? மஹ்தி குடும்பம் பிடிவாதம்.. இடியாக வந்த அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சனா: ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டது அவரது குடும்பத்திற்கு ஓரளவு நிம்மதியை அளித்திருந்தாலும், அவரது மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சியில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, ஜூலை 16ம் தேதி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும் பாதிக்கப்பட்ட ஏமன் இளைஞரான தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினர் இன்னும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்பது தான் நிமிஷாவின் தாய்க்கு இடியாக இருக்கிறது.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷாவை பற்றி கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பல்வேறு செய்திகளை பார்த்திருப்பீர்கள். நிமிஷா தனது தொழில் கூட்டாளியான மஹ்தியின் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், 2018 முதல் ஏமன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தன்னை துன்புறுத்தி, மிரட்டி பணம் பறித்தததால், மஹ்திக்கு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தியதாகவும், டோஸ் அதிகமானதால் அவர் இறந்துவிடடார் என்றும் நிமிஷா கூறியுள்ளார். இந்த வழக்கில் தான் நிமிஷாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 16ம் தேதி நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளாவில் உள்ள மூத்த சன்னி தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் ஏமன் தலைவர்களிடம் நேரடியாக பேசியதால், மரண தண்டனை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Nimisha Priya Kerala Nurse s Execution in Yemen Delayed What will happen next

ஏமாற்றம்

இதை சற்றும் எதிர்பார்க்காத மஹ்தியின் சகோதரர் தலால் அப்துல் ஃபத்தா மஹ்தியின் மரணதண்டனையை ஒத்திவைக்கும் முடிவு எதிர்பார்க்காத ஏமாற்றமாக பார்க்கிறார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஒரு குற்றவாளி செலுத்தும் இழப்பீடான இரத்தப் பணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அப்துல் ஃபத்தா மஹ்தி, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீதிக்காகக் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார். சமரச முயற்சிகளால் ஆச்சரியப்படவில்லை என்றும், கடந்த காலங்களில் திரைக்குப் பின்னால் முயற்சிகள் இருந்தது என்றும், எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பழிக்கு பழி என்ற எங்கள் கோரிக்கையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

மரணதண்டனை விஷயத்தில் எந்த ஒரு சமரச முயற்சிகளையும் அப்துல் ஃபத்தா மஹ்தி குடும்பத்தினர் ஏற்கவிலை என்கிற நிலையில், மரணதண்டனை தேதியை நிர்ணயித்த அவர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருந்துள்ளது. என்ன தான் அதிகாரிகள், மத தலைவர்கள் பலர் அழுத்தம் தந்த போதிலும், இரத்த பணத்தை அப்துல் ஃபத்தா மஹ்தி வாங்கவே இல்லை.. உண்மையை ஒருபோதும் மறக்க முடியாது என்றும், எவ்வளவு காலம் கழித்து நீதி (நிமிஷாவின் மரணம்) வருவதாக இருந்தாலும் காத்திருப்பேன் என்றும், கடவுளிடமிருந்து, நாங்கள் உதவியை நாடுகிறோம் என்றும் மஹ்தி கூறினார்.

ஏமனில் விமர்சனம்

இது ஒரு புறம் எனில் பல ஏமன் சமூக ஊடகக் கணக்கு பிரபலங்கள் இரத்தப் பணத்தை செலுத்தி மரண தண்டனையைக் குறைக்கும் முயற்சிகளை விமர்சித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் மஹ்தி குடும்பத்தினரை சந்தித்து பேசி சமாதானம் செய்வதற்காக சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் என்பவருடன், நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமகுமாரி சேர்ந்து சில ஆண்டுகளாகவே ஏமனில் தான் இருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரிடமும், முதலில் சமாதானம் செய்ய வேண்டும் என்பதால் அதில் தான் தற்போது கவனம் செலுத்து வருகிறார்கள்.

ஊடக செய்திகள்

தண்டனை ஒத்திவைக்கப்பட்டதால் மகிழ்ச்சி என்றாலும் நிமிஷாவின் குடும்பத்தினர் - அவரது தாயார் பிரேமகுமாரி, கணவர் டோமி தாமஸ் மற்றும் மகள் - இந்த வழக்கு குறித்த ஊடக செய்திகள் தொடர்ந்து வருவதைப் பற்றி கவலையுடன் உள்ளனர். ஊடகங்களில் பல விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட ஏமன் இளைஞரை இழிவுபடுத்தும் ஊடக அறிக்கைகளும் சமூக ஊடக விமர்சனங்களும் அவர்களுக்கு நிமிஷாவின் விடுதலையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறார்கள்.

வாழும் நாள் நரகம்

மேலும் ஏமன் சட்டத்தை விமர்சித்து கண்டபடி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களில் வரும் பதிவுகள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைத் தூண்டிவிடும் என்று நிமிஷாவின் குடும்பம் கவலையில் இருக்கிறது. நிமிஷாவை மன்னிக்கும்படி குடும்பத்தினரிடம் மன்றாடும் அவரது தாய் பிரேமாகுமாரி, அதற்கு பதில் தன் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கெஞ்சுகிறார். ஆனால் நிமிஷாவை மன்னிக்க மஹ்தி குடும்பம் தயாராக இல்லை என்பதே எதார்த்தம். எனவே தண்டனை தள்ளித்தான் போயிருக்கிறதே தவிர, முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை.. ரஜினி சொல்வது போல் சொல்வது என்றால், சாகிற நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும். அது தான் நிமிஷாவின் வாழ்க்கையில் நடந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+