இந்தியாவில் பாதுகாப்பில்லாதவர்கள் “செய்தியாளர்கள்”; இதுவரை 9 பேர் கொலை - சொல்கிறது ஆய்வு!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆசியாவிலேயே செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் கண்காணிப்பு அமைப்பு 2014 இல் இந்தியாவில் ஒன்பது நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது.

"எல்லைகள் இல்லாத நிருபர்கள்" என்ற சர்வதேச அமைப்பின் ஆய்வறிக்கையில், "உலகம் முழுவதும் 2014 இல் 110 நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காகவும், கொலையாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதியதற்காகவும் 67 நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலைகள் அதிகம்:

கொலைகள் அதிகம்:

பிற நிருபர்கள் பல வித காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர்.பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன், பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் நிருபர்கள் அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பாதுகாப்பில்லை:

இந்தியாவில் பாதுகாப்பில்லை:

ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா உள்ளது. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அதிகாரிகள் தவறி விட்டனர்.

பயங்கரவாதிகள் காரணம்:

பயங்கரவாதிகள் காரணம்:

உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா போன்ற ஆகிய பயங்கரவாத அமைப்புகளால் தான் 40 சதவீத நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொத்துக் கொத்தாய் கொலை:

கொத்துக் கொத்தாய் கொலை:

அதிலும், சிரியா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், இந்தியாவில் பாதுகாப்பு என்பதே பத்திரிக்கையாளர்களுக்கு கேள்விக்குறிதான்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+